Month: December 2020

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் நிரம்பிய புத்தாண்டு வாழ்த்துகள் இந்த ஆண்டு உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறட்டும். புதிய செயல்கள் வெற்றி அடையட்டும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் Ring Out, Wild Bell – Alfred Tennyson Ring out, wild bells, to the wild sky,The flying cloud, the frosty light:The year is dying in the night;Ring out, wild bells, and let him die.Ring out the old, ring …

புத்தாண்டு வாழ்த்துகள் Read More »

கடல் கடந்த கடிதங்கள்.

ஒரு பழைய புத்தகக் கடைக்கும் , அதன் வாடிக்கையாளருக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்திய புத்தகம் 84, சேரிங் கிராஸ் ரோடு. உண்மை சம்பவத்தின் தொகுப்பு. புத்தகம் முழுவதும் கடிதங்களே இடம்பெற்றிருக்கின்றன. 1970 ஆம் ஆண்டு ஹெலன் ஹான்ஃப் வெளியிட்ட இந்தப் புத்தகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அதன் தொடர்ச்சியாக மேடைநாடகமாகவும் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் நாடக ஆசிரியரான ஹெலன் ஹான்ஃ புத்தகம் படிப்பதை வாழ்க்கையாகக் கொண்டவர். அவர் பிரிட்டிஷ் இலக்கியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி …

கடல் கடந்த கடிதங்கள். Read More »

உலக இலக்கியக் கொண்டாட்டம்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக இலக்கியம் குறித்து ஏழு நாட்கள் தொடர் உரைகள் நிகழ்த்தினேன்.சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் நிற்க இடமில்லாத அளவு கூட்டம். மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த உரைகள் தனியே டிவிடியாக வெளிவந்து ஆயிரக்கணக்கில் விற்பனையாகியது. உரையின் வடிவம் நூலாகவும் வெளியானது அது போன்ற தொடர் உரைகளை மறுபடியும் நிகழ்த்த விரும்பினேன். அதற்கான காலமும் சூழலும் அமையவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. ஆகவே ஒரு …

உலக இலக்கியக் கொண்டாட்டம் Read More »

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான். கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் …

நூலக மனிதர்கள் 30 மறுக்கப்பட்ட புத்தகங்கள் Read More »

ஐன்ஸ்டீனின் கனவுகள்

முப்பது ஆண்டுகளுக்கு முன்புகவிஞர் ஆனந்த், கவிஞர் தேவதச்சன் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து காலம் பற்றிய ஆய்வு ஒன்றில் ஈடுபட்டார்கள். 1992ல் ஆனந்த் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது காலம் குறித்த வியப்பான விஷயங்களை, தகவல்களை, கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அந்த ஆய்விற்காகப் பலரையும் நேர்காணல் செய்தார்கள்.  ஆனால் அது இன்றும் வெளியிடப்படவில்லை. இன்று Einstein’s Dreams என்ற நாவலை வாசிக்கும் போது அந்த நினைவுகள் வந்து போயின ஆலன் லைட்மென் எழுதிய இந்த நாவல் ஐன்ஸ்டீனின் …

ஐன்ஸ்டீனின் கனவுகள் Read More »

நிழல் பேசுவதில்லை.

புகைப்படக்கலைஞர் ஜான்ஐசக் நேர்காணல் ஒன்றில் அவர் யுனெஸ்கோவிற்காகப் பிரபல நடிகை ஆட்ரி ஹெபர்னுடன் செய்த பயண அனுபவங்களைப் பகிர்ந்திருப்பார். அதில் புகழ் வெளிச்சத்தைத் தன் மீது படிய விடாமல் ஹெபர்ன் எளிமையாக எல்லோருடன் பழகினார்.ஆதரவற்ற குழந்தைகளைத் தேடிச் சென்று உதவிகள் செய்தார். நோயுற்ற குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தார். கைவிடப்பட்ட சிறார்களுடன் கைகோர்த்து நடந்தார். குழந்தைகளுடன் இருக்கும் போது மிகச் சந்தோஷமாக உணர்வதாக ஹெபர்ன் சொன்னார். அந்த மகிழ்ச்சி அவரது கண்களில் பிரதிபலித்தது என்று …

நிழல் பேசுவதில்லை. Read More »

விழா

நேற்று எனது புத்தக வெளியீடு நேரலையின் வழியே சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் எனது விருப்பத்திற்குரிய வாசகர்களும் நண்பர்களும் புத்தகத்தின் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர் பிரபாகரன். எழுத்தாளர் அகர முதல்வன். நண்பர் சண்முகம், இயக்குநர் மோகன். இணை இயக்குநர் மந்திரமூர்த்தி, மதுரை அழகர், ஆகிய அனைவருக்கும் மனம் நிரம்பிய நன்றி நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த ஸ்ருதி டிவி கபிலன். சுரேஷ் இருவருக்கும் அன்பும் நன்றிகளும் புத்தகங்களை அழகாக அச்சிட்டு உதவிய …

விழா Read More »

அஞ்சலி

தமிழ் பண்பாட்டின் வேர்களை நமக்கு அடையாளம் காட்டிய பெருந்தகைதமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனிமையின் கண்கள்.

இளங்கவிஞரான வே.நி.சூர்யா மிகச் சிறப்பான கவிதைகளை எழுதி வருகிறார். கரப்பானியம் என்ற அவரது கவிதைத் தொகுப்பு மிக முக்கியமானது. இதனைத் சால்ட் பதிப்பகம் வெளியீட்டுள்ளது அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகும் கவிதைகளும் அற்புதமாக உள்ளன. இணையம் மற்றும் சிற்றிதழ்களில் தொடர்ந்து வெளியாகி வரும் அவரது கவிதைகள் தனித்துவமான குரலில் ஒலிக்கின்றன. தன்னைச் சிதறடிக்கும் கவிதைகள் என்று இவற்றை கூறலாம். தானற்று போவதையும் தான் எதில், எவ்வாறு சிதறி வெளிப்படுகிறோம் அல்லது விலக்கப்படுகிறோம் என்பதையே சூர்யாவின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அவரது …

தனிமையின் கண்கள். Read More »