நூலக மனிதர்கள் 24 ஜெர்மனியின் பரிசு
1980களில் பொது நூலகங்களுக்கு GDR Review என்ற ஆங்கில இதழை ஜெர்மன் தூதரகம் அனுப்பி வந்தது. அழகான வண்ண காகிதத்தில் மிக நேர்த்தியான புகைப்படங்களுடன் அந்த இதழ் வெளிவந்தது. கிராமப்புற நூலகத்தில் யார் ஆங்கில இதழைப் படிக்கப் போகிறவர்கள். ஆகவே நூலகர் இதழின் உறையைக் கூடப் பிரிக்காமல் அப்படியே போட்டு வைத்திருப்பார். நான் ஒருவன் தான் அதைக் கேட்டு வாங்கிப் பிரித்துப் படிப்பவன். அந்த இதழின் சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை புது டயரி மற்றும் காலண்டர் ஒன்றை …