நூலக மனிதர்கள் 25 நினைவில் நிற்பது.
அந்த இளைஞருக்கு முப்பது வயதிருக்கக் கூடும். பேஸ்கட் பால் பிளேயர் போன்ற உயரம். கழுத்தில் ஒரு கறுப்பு கயிறு. அடர் பச்சை வண்ண பேண்ட். இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட சட்டையை அணிந்திருந்தார். பொதுநூலகத்திற்குப் போய் வருவதில் உள்ள சௌகரியம். நிறையப் புதிய மனிதர்களைச் சந்திக்க முடிவது. அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொள்வது. அப்படித்தான் அந்த இளைஞரும் அறிமுகமானார். அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டையில் வேலை செய்வதாகச் சொல்லியிருந்தார். பெரும்பாலும் நைட் ஷிப் என்பதால் பகலில் உறங்கிவிடுவார். வாரம் …