Month: January 2021

தேவதைகளின் தோழன்

ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Andersen. Zhizn bez lyubvi என்ற ரஷ்யத் திரைப்படத்தைப் பார்த்தேன். இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது சிறார்களுக்கான படமாக இதை உருவாக்கவில்லை. விசித்திரமான நிகழ்வுகளும் நிஜமான அனுபவங்களும் ஒன்று சேர்ந்த உளவியல் படைப்பாகவே படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சனின் நினைவுகளே படத்தை முன்னெடுக்கின்றன. சிறந்த ஒளிப்பதிவு மற்றும்  இசை படத்தின் தனித்துவமாகும். சிறுவர்களுக்கான தேவதை கதைகளை எழுதி உலகப் புகழ்பெற்றவர் ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் .The Steadfast Tin Soldie, The …

தேவதைகளின் தோழன் Read More »

சென்னை புத்தகக் கண்காட்சி

44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது

மேகம் போல வாழ்க்கை

போலந்தில் வாழ்ந்த ஜிப்ஸி இனக்குழுவைச் சார்ந்த கவிஞர் பபுஸ்ஸாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் Papusza திரைப்படத்தைப் பார்த்தேன். 2013ல் வெளியான படமிது. கறுப்பு வெள்ளையில் உருவாக்கப்பட்ட காவியம் என்றே இதைச் சொல்வேன். ஓவியங்களில் காணப்படுவது போல அகன்ற நிலக்காட்சியினை வெகு நேர்த்தியாகத் திரையில் பதிவு செய்திருக்கிறார்கள். முடிவற்ற நிலவெளியில் ஜிப்ஸிகள் குதிரைவண்டிகளில் பயணம் செய்வது, முகாமிட்டுத் தங்குவது. அவர்களின் இரவு வாழ்க்கை, நடனம், வாழ்க்கை நெருக்கடிகள். இரண்டாம் உலகப்போரின் போது உயிர்தப்பி அலைந்த போராட்டம் என ரோமா …

மேகம் போல வாழ்க்கை Read More »

அஞ்சலி

ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி படைப்பாளியான டொமினிக் ஜீவா மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் மல்லிகை இதழின் வழியே சிறந்த முற்போக்கு படைப்பாளிகளை உருவாக்கியவர். 1966 துவக்கபட்ட மல்லிகை 2012 வரை 401 இதழ்கள் வெளியாகியிருக்கிறது. இது தனித்துவமான சாதனையாகும். ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் டொமினிக் ஜீவா அவர்களின் பெயர் என்றும் நிலைத்திருக்கும்.

ஆன்டன் செகாவ் பிறந்தநாள்.

இன்று ஆன்டன் செகாவின் பிறந்த நாள். 161 வது பிறந்த நாளிது. இந்த நாளில் அவரை மானசீகமாக வணங்குகிறேன். ரஷ்ய இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியான அவரது வாழ்க்கை வரலாற்றை செகாவ் வாழ்கிறார் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறேன். செகாவ் பற்றி விரிவான உரையும் நிகழ்த்தியிருக்கிறேன். செகாவின் பிறந்த நாளில் அவரது சிறுகதை தொகுப்பிலிருந்து ROTHSCHILD’S FIDDLE, THE BLACK MONK என்ற இரண்டு கதைகளை வாசித்தேன். இப்போது தான் எழுதி வெளியானது போல புத்துணர்வு. அலங்காரமில்லாத எளிமை. …

ஆன்டன் செகாவ் பிறந்தநாள். Read More »

நன்றி

எனது மகன் ஹரியின் White Knights Creative Agency நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்திய திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன், திரு. சீனு ராமசாமி, திரு. ஆனந்த சங்கர் ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த நன்றி இந்த நிகழ்வை வாழ்த்திய நண்பர்கள். வாசகர்கள். அன்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் தொடர்புக்கு https://www.whiteknights.in/ https://www.facebook.com/Whiteknightsofficial

குரலின் ஈரம்.

ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் அரபு அமெரிக்கன் கவிதைகளுக்கான இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது மகளின் பெயர் கர்மா. I am Palestinian by birth, American by citizenship, Egyptian at heart. எனத் தன்னைப் பற்றிச் சொல்கிறார் எல்முசா. Flawed Landscape என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.. மூன்று பகுதிகளாக உள்ள தொகுப்பிது. இதில் ஒரு கவிதை …

குரலின் ஈரம். Read More »

சொல்லின் வலிமை.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பல்வேறு தருணங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது I’m Not Here to Give a Speech. தலைப்பு அவரது சிறுகதையான I Only Came to Use the Phoneயை நினைவுபடுத்துகிறது. அவர் ஸ்பானிஷில் நிகழ்த்திய உரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். பெரும்பான்மையான உரைகள் சிறியவை.. இதன் எழுத்துவடிவத்தை மார்க்வெஸ் உருவாக்கியிருக்கிறார். எழுதி வைத்த உரைகளைச் சில தருணங்களில் அப்படியே வாசித்திருக்கிறார். மேடைப்பேச்சு குறித்த தனது பயத்தையும் …

சொல்லின் வலிமை. Read More »

திறப்பு விழா

ஜனவரி 28 காலை ஒன்பதரை மணிக்கு ஹரியின்  White Knights நிறுவனத்தை திரு. ராஜீவ் மேனன், திரு. பார்த்திபன். திரு. சீனுராமசாமி, திரு. ஆனந்த் சங்கர் ஆகியோர் இணையவழியாக துவக்கி வைத்து வாழ்த்துகிறார்கள். தொடர்பு கொள்ள : Instagramhttps://instagram.com/whiteknights_creativeagency?igshid=19mo8wijzaqsnTwitterhttps://twitter.com/white_knightsof?s=20Contact number:+91-8939329251

கடவுளின் எட்டாம் நாள்

சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன்.  இவர்  ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை. *** உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள்  எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி …

கடவுளின் எட்டாம் நாள் Read More »