திரைக்கூட்டணி
புக்கர் பரிசு மற்றும் ஆஸ்கார் விருது இரண்டையும் வென்ற ஒரே எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜாப்வாலா. மெர்சண்ட் ஐவரி தயாரிப்பில் வெளியான படங்களுக்கு இவரே திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். இவர்கள் கூட்டணி கடைசிவரை நீடித்தது. ஹாலிவுட் சினிமாவில் பெண் திரைக்கதை ஆசிரியர்கள் குறைவு. அதிலும் இப்படி நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கூட்டணியாகத் திரைப்படத்தில் பணியாற்றுவது அபூர்வமானது. ஜாப்வாலா பன்னிரண்டு நாவல்களையும் எட்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 23 படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதில் இரண்டு முறை சிறந்த …