காலைக்குறிப்புகள் 28 தனிமையும் கனவுகளும்
எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தனது நேர்காணல் ஒன்றில் அன்றாடம் தனக்கு வரும் கனவுகளை ஒரு நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். அவற்றை என்ன செய்வார் என்று சொல்லவில்லை. கனவுகளிலிருந்து எழுதுவதற்கான கருவைப் பெறுவதாக எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள். ரஸ்கின் பாண்டிற்கும் கனவு வழிகாட்டவே செய்கிறது. திப்புசுல்தான் தனது கனவுகளை இது போலத் தொடர்ந்து பதிவு செய்து வந்ததோடு அவற்றிற்கு விளக்கம் என்னவென்று ஆராய்ந்துமிருக்கிறார். அவை தனி நூலாக வெளிவந்துள்ளன. ரஸ்கின் பாண்டின் சிறார்கதைகைள் தலைமுறைகள் …