கடவுளின் எட்டாம் நாள்
சமகால ஆர்மீனிய எழுத்தாளரான வில்லியம் மிகைலின் எழுதிய ஒரு குறுங்கதையை வாசித்தேன். இவர் ஒரு முக்கிய கவிஞர். மூன்று கவிதை தொகுப்புகளும் இரண்டு கட்டுரைத் தொகுதிகளும் ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். பகடி எழுத்திற்கு சிறந்த உதாரணம் போலிருக்கிறது இக் கதை. *** உலகைச் சிருஷ்டித்து சலித்துப் போன கடவுள் எட்டாம் நாளில் ஒரு டெலிவிஷனை உருவாக்கினார். கொஞ்ச நேரம் அதைப் பார்த்து கொண்டிருந்தார். பிறகு சே.. சகிக்கமுடியலே மோசம் என்று அதை அணைத்துவிட்டு உறங்கிவிட்டார். அவர் உறங்கி …