புத்தகக் காட்சி தினங்கள் -2
நேற்று புத்தகக் கண்காட்சியில் நல்லகூட்டம். நீண்ட காலத்தின் பின்பு அலை அலையாகப் புத்தகம் வாங்க வந்த மக்களைக் காணச் சந்தோஷமாக இருந்தது. வழக்கமாக எந்த வரிசையில் எந்தக் கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் ஒன்றை பபாசி அளிப்பார்கள். சில நேரம் அது தன்னார்வலர்கள் முயற்சியிலும் வெளியிடப்படும். இந்த ஆண்டு அப்படி எந்தத் தகவலும் தெரியாத காரணத்தால் தேசாந்திரி அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் அலைந்து திரிந்து நிறைய பேர் சிரமப்பட்டிருக்கிறார்கள். பபாசி கடைகளின் பட்டியலை வெளியிட்டால் …