போர்ஹெஸின் பயணம்.
அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை. ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று …