பெர்க்மெனின் விரிந்த சிறகுகள்
இங்க்மார் பெர்க்மேனின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இரண்டு ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டன. அதில் Searching for Ingmar Bergman அவரது வாழ்க்கை மற்றும் திரையுலக வாழ்வினை விவரித்தது. அதில் பெர்க்மென் எப்படி உலகை விட்டு ஒதுங்கி ஒரு தீவில்வீட்டைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் எழுப்பிக் கொண்டு பார்வையாளர்களை முற்றிலும் தவிர்த்தபடியே வாழ்ந்தார் என்பதையும் அவரது கசப்பான திருமண உறவுகள், அவரது திரையுலக அனுபவங்கள் மற்றும் காதல் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. Bergman: A Year in the …