Month: March 2021

ஒளியை வாசிக்கிறவன்

அட்சரம் இதழில் வெளியான சிறுகதை – மீள்பிரசுரம். அந்த அறையில் அவனும் திமிங்கிலத்தையும் தவிர வேறு யாருமேயில்லை. கடலைவிட்டு வெளியேறி நாற்பதாண்டுகளாகி, உரு அழிந்து எலும்பு பொறியென நீண்டு நிசப்தித்திருக்கும் அந்தத் திமிங்கலத்தை எப்போது காணும் போதும் பிரம்மாண்டம் குறைவதேயில்லை. கோபாலராவ் திரும்பவும் அதன் வால் அருகே நின்றவனாக மொத்த திமிங்கலத்தையும் ஒருமுறை பார்த்தான். கண்களில் அடங்காத உருவம். மீனின் அடிவயிறு ஊஞ்சலென ஆடிக்கொண்டிருந்தது. இந்தத் திமிங்கலம் தன்னை விழுங்கியிருந்தால் இதே விலாவின் இரு எலும்புகளை பற்றியபடி …

ஒளியை வாசிக்கிறவன் Read More »

கூண்டிற்கு வெளியே

கூண்டிற்குள் அடைக்கபட்ட விலங்குகளை ஏன் வேடிக்கை பார்க்கிறோம். அண்ணா உயிரியல் பூங்காவிற்குச் செல்லும் போதெல்லாம் அங்கே வரும் மனிதர்களின் விசித்திரமான செயல்களை, நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். விலங்குகளை விட மேம்பட்டவனாக கருதப்படும் மனிதன் தான் உண்மையில் வேடிக்கை பார்க்கப்பட வேண்டியவன். வீட்டு விலங்குகள் அவனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. காட்டுவிலங்குகளோ அவனை பொருட்டாக கருதுவதேயில்லை. ஆகவே தன் அதிகாரத்திற்குள் விலங்குகளை அடக்கி ஒடுக்கச் செய்யும் முயற்சியே மிருகக்காட்சி சாலைகள். இயற்கையான வாழ்விடத்தில் மிருகங்களைக் காணுவதும் மிருகக் …

கூண்டிற்கு வெளியே Read More »

மீட்கப்பட்ட சிறுமி.

News of the World என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த திரைப்படம் இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளது. அந்தப்படத்தினை நேற்றிரவு பார்த்தேன் அதில் கேப்டன் ஜெபர்சன் என்ற கதாபாத்திரத்தில் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கிறார். நாளிதழில் வந்துள்ள முக்கியமான செய்திகளைத் திரட்டி அவற்றைத் தொலைதூரங்களில் வசிக்கும் மக்களுக்கு அறிவிப்பு செய்யும் நியூஸ் ரீடர் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் கட்டணம் கொடுத்து செய்தி வாசிப்பினைக் கேட்டிருக்கிறார்கள். என் பத்துவயதுகளில் ராணுவத்தில் வேலைக்குப் போய் திரும்பி …

மீட்கப்பட்ட சிறுமி. Read More »

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள்

“கடவுள் விடுகிற மூச்சைப்போல் காற்று வீசும் கரிசல்வெளி வெயிலின் சமுத்திரத்தில் யாவும் முங்கிய நிசப்தம் கருஞ்சாம்பல் மண்பரப்புக்குள் மெல்ல முனகும் சிருஷ்டிகரம்“ எனக் கவிஞர் தேவதச்சனின் கவிதை ஒன்று துவங்குகிறது. இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ள கடவுள் விடுகிற மூச்சைப் போலக் காற்றுவீசும் நிலப்பரப்பைத் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்பிரான்செஸ்கோ ரோஸி. அந்தப்படம் Christ Stopped at Eboli (1979) இத்தாலிய இயக்குநரான பிரான்செஸ்கோ ரோஸி இயக்கிய Christ Stopped at Eboli (1979), இத்தாலியின் புகழ்பெற்ற எழுத்தாளரான கார்லோ லெவியின் …

புறக்கணிப்பின் நிலக்காட்சிகள் Read More »

சித்ரலேகாவின் வகுப்பறைகள்

புதிய சிறுகதை அன்றோடு இருபத்தைந்து வருஷம் துவங்கியிருந்தது. சித்ரலேகா டீச்சராக வேலைக்குச் சேர்ந்து இருபத்தைந்து வருஷங்களாகி விட்டது. இந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை. புதுச்சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளது கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ அந்த நாள் முக்கியமானதில்லை. யாரும் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவளால் அந்த நாளை எப்படி மறக்க முடியும். வேலைக்கு ஆர்டர் வாங்கிக் கொண்டு முதல்நாள் சென்ற போதும் இப்படிப் புதுப்புடவையைத் தான் கட்டிக் கொண்டாள். …

சித்ரலேகாவின் வகுப்பறைகள் Read More »

செய்தியின் நிறம்.

புதிய சிறுகதை தொலைவில் மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது. கண்ணாடியைச் சரி செய்தபடியே திவாகர் காருக்கு வெளியே பார்த்தான். ஒருவேளை அது உணவகமாக இருக்கக்கூடும். கடிகாரத்தைப் பார்த்தபோது பத்தரையைக் கடந்திருந்தது. இரவு ஏழு மணிக்கே அவனுக்குப் பசித்தது. ஆனால் வக்கீல் ஷியாம்பிரசாத்தை காணப் போக வேண்டும் என்பதால் சமோசா மட்டுமே சாப்பிட்டான். ஷியாம்பிரசாத் வீட்டில் மசாலா டீ கொடுத்தார்கள். மாலையிலிருந்து மூன்று நான்குமுறை டீ குடித்தாகிவிட்டது. அது நாக்கில் புளிப்புச் சுவையை உருவாக்கியிருந்தது. பர்காம்புரா போவதற்கு இன்னும் …

செய்தியின் நிறம். Read More »

கதை சொல்லும் புகைப்படங்கள்.

To me taking pictures means discovering rhythms, lines in reality. The eye does the framing, and the camera does the work. You see a photograph all at once, like the painting. – Henri Cartier-Bresson உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்டியர்-ப்ரெஸன் குறித்த impassioned eye என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். நம் எல்லோர் கையிலும் செல்போன் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாள் முழுவதும் புகைப்படம் …

கதை சொல்லும் புகைப்படங்கள். Read More »

ஏனுகுல வீராசாமி

காசி யாத்திரை என்ற1832இல் வெளியான நூலே தமிழின் முதல் பயண இலக்கியமாகக் கருதப்படுகிறது. இதை எழுதியவர் ஏனுகுல வீராசாமி . இவர் சென்னையில் வசித்தவர். 1830ம் வருஷம் மே மாதம் 18ம் தேதி இவர் மதராஸிலிருந்து காசி யாத்திரைக்குப் புறப்பட்டார். ஒரு வருஷம் மூன்று மாதங்கள் நீண்ட இந்தப் பயணம் செப்டம்பர் 1831ல் முடிவு பெற்றது. தனது பயண அனுபவத்தை அவர் குறிப்பேட்டிலும் கடிதங்கள் வழியாகவும் எழுதி வந்தார். தெலுங்கில் இவர் எழுதிய குறிப்புகளைப் பனையூர் வெங்குமுதலி …

ஏனுகுல வீராசாமி Read More »

சுவர் தோறும் ஓவியங்கள்

தேனுகா •• திருப்பரங்குற்றத்து முருகப்பெருமானை வழிபடும் மக்கள் அதன் அருகில் உள்ள சித்திரக் கூடத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசிக்காமல் வருவதில்லை. ரதி, மன்மதன், பூனை உருவம் கொண்டு ஓடும் இந்திரன், கௌதம முனிவன் முதலிய ஓவியங்களை கண்டவர்கள் இது என்ன, அது என்ன, இவர் யார், அவர் யார் என்று ஒருவருக்கொருவர் கேட்டு மகிழ்வுரும் காட்சியை நப்பண்ணனார் என்னும் புலவர் கூறுகிறார். சித்திரை மாடத்து ஓவியங்களை பார்த்துக் கொண்டே உயிர் நீத்த பாண்டிய மன்னனை, ‘சித்திர …

சுவர் தோறும் ஓவியங்கள் Read More »