Day: March 3, 2021

தீவிற்கு வரும் பறவை

புத்தக வாசிப்பாளர்களையும் இலக்கிய ஈடுபாட்டினையும் கொண்டாடும் திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகியுள்ளன. ஹாலிவுட்டில் ஆண்டிற்கு ஒரு படம் இந்த வகைமையில் உருவாக்கபட்டு வெற்றியடைகிறது. இரண்டாயிர வருடப்பழமையான தமிழ் இலக்கியத்தில் அதன் முக்கிய நாவல்கள் காப்பியங்கள் இன்றும் திரைப்படமாக்கபடவில்லை. இந்த இலக்கியங்களைக் கொண்டாடுவதை வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கள் பற்றியோ, இலக்கிய அமைப்புகள் பற்றியோ எவ்விதமான ஆவணப்பதிவுகளும் கிடையாது இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுப்பணிக்காகத் தமிழகத்திலுள்ள இலக்கிய அமைப்புகளைத் தொகுக்க முற்பட்டேன். தொல்காப்பியம் திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற …

தீவிற்கு வரும் பறவை Read More »

இந்தியக் கலைகள்

இந்தியக் கலைகள், நாடகம். நிகழ்த்துக் கலைகள், வரலாறு, அகழ்வாய்வு, இயற்கை வரலாறு, கட்டிடக்கலை, பண்பாடு குறித்த முக்கியக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் Marg இதழை நீண்டகாலமாகவே வாங்கி வாசித்து வருகிறேன். இது காலாண்டு இதழாக வெளிவருகிறது. ஒரு இதழின் விலை ரூ250. அழகான வண்ணப்படங்களுடன் சிறந்த கட்டுரைகளுடன் இதழ் வெளியாகிறது. மின்னிதழாகவும் இதை வாசிக்க இயலும். எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் 1946 ஆம் ஆண்டில் மார்க் பவுண்டேஷனை உருவாக்கினார். இந்தியக் கலைகள் குறித்த ஆய்வுமையமாக இது உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனமே மார்க் இதழை வெளியிடுகிறது. ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட மையப்பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. …

இந்தியக் கலைகள் Read More »

பிரபஞ்சனின் நினைவு

இந்தப் புத்தகக் கண்காட்சி துவங்கிய நாளில் இருந்தே பிரபஞ்சனைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் இல்லாத வெறுமை மனதைப் பெருந்துயரம் கொள்ளச் செய்கிறது. எத்தனை அன்பான மனிதர். அவரோடு புத்தகக் கண்காட்சியில் சுற்றியலைந்த நாட்கள் மனதில் நிழலாடுகின்றன அவரைப் பற்றி முன்பு எழுதிய கட்டுரையினை நேற்று திரும்பப் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் அவர் இல்லாத வலி மேலும் அதிகமாகியது •• பிரபஞ்சனின் இணையற்ற தோழமை என்ற எனது கட்டுரையின் ஒரு பகுதி : பிரபஞ்சன் என்றால் மனதில் …

பிரபஞ்சனின் நினைவு Read More »

இந்து தமிழ் நாளிதழில்

இன்றைய இந்து தமிழ் நாளிதழில் புதிய சிறார் நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதில் எனது சிறார் நூல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். மாறுபட்ட நூல்கள் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’, ‘அபாய வீரன்’ ஆகிய சிறார் கதைத் தொகுப்புகள், ‘அண்டசராசரம்’ என்கிற நாவல் ஆகியவை வெளியாகியுள்ளன. (தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 9600034659). நன்றி இந்து தமிழ் நாளிதழ்

எனது பரிந்துரைகள் -4

புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள். நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும். கவிதாலயம், …

எனது பரிந்துரைகள் -4 Read More »

நானும் எனது இலக்கியத் தேடலும்.

(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.) எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் …

நானும் எனது இலக்கியத் தேடலும். Read More »