Month: May 2021

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள்

ஒரு சிறுகதையை ஆழ்ந்து படித்து எவ்வளவு சிறப்பாக ஆராய முடியும் என்பதற்கு உதாரணமாக உள்ளது ஜிஃப்ரி ஹாஸன் எழுதியுள்ள இந்த விமர்சனக்கட்டுரை இலங்கையில் வாழும் ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதைகளும் மொழிபெயர்ப்புகளும செய்து வருகிறார். பதாகை இதழில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது. பதாகைக்கும் ஜிஃப்ரி ஹாஸனுக்கும் எனது அன்பும் நன்றியும் •••• ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் – எஸ்.ரா.வின் காகிதப்பறவைகள் கதை கிளர்த்தும் சலனங்கள் -ஜிஃப்ரி ஹாஸன் –இலங்கை தமிழ்ச்சிறுகதையில் இருவேறுபட்ட பரிமாணங்களை மொழிசார்ந்து பரீட்சித்துப் பார்த்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். …

ஒரு காகிதப்பறவையின் சிறகுகள் Read More »

உப பாண்டவம்- மலையாளம்

எனது நாவல் உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது. டிசி புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள். இந்த ஆண்டு மலையாளத்தில் எனது மூன்று நூல்கள் வெளியாக இருக்கின்றன.

மெளனியுடன் கொஞ்ச தூரம்

திலீப்குமார் எழுத்தாளர் திலீப்குமார் மெளனியின் படைப்புலகம் குறித்து ‘மெளனியுடன் கொஞ்சதூரம்’ என்றொரு விமர்சன நூலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மிக முக்கியமான நூல் அந்த நூலின் துவக்கத்தில் திலீப்குமார் தனது இலக்கியப்புரிதலை அழகாக வரையறை செய்து கொண்டிருக்கிறார். •••• மௌனியைப் பற்றிப் பல்வேறு விதமான அபிப்பிராயங்கள் நிலவுவதை நாம் காண்கிறோம். அவரை வெகுவாகக் கொண்டாடவும், கடுமையாகத் தூஷிக்கவும் பலர் உள்ளனர். ’மௌனியின் எழுத்துக்கள் புரியவில்லை’; ‘அவர் சமூகப் பார்வையற்றவர்’ என்றெல்லாம் அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல், …

மெளனியுடன் கொஞ்ச தூரம் Read More »

மணிகௌல்

1983ம் ஆண்டு மணிகௌல் இயக்கிய மிகச்சிறந்த ஆவணப்படம் Dhrupad. ஹிந்துஸ்தானி இசையின் மேன்மையைச் சொல்லும் இந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதன் இசை மெய்மறக்க செய்கிறது துருபத் என்பது ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் மிகப் பழமையான வடிவமாகும், தலைமுறை தலைமுறைகளாகப் பாடிக்கொண்டிருக்கும் ஹிந்துஸ்தானி பாடகர்கள் இந்த மரபை அப்படியே தொடருகிறார்கள். தியானத்தின் போது நாம் அடையும் அமைதியை, சந்தோஷத்தை இந்தப்படமும் நமக்குத் தருகிறது

ஆயிரம் கதைகளின் நாயகன்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்துவிட்டார். நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அனைவரும் காத்திருந்த வேளையில் இந்த மண்ணுலகவாழ்வு போதும் என்று உதறி விடைபெற்றுவிட்டார். விவசாயிகள் அப்படித்தான் பெரியதாக எதற்கும் ஆசைப்பட மாட்டார்கள். இளவயதிலே காசநோயாளியாகச் சாவின் விரல்கள் தன் மீது படருவதைச் சந்தித்து மீண்டவர் என்பதால் அவருக்குக் கிடைத்தது இரண்டாவது வாழ்க்கை என்றே சொல்லுவார். இந்த வாழ்க்கையைத் தேனை ருசித்துச் சாப்பிடுவது போலத் துளித்துளியாக அனுபவித்து வாழ்ந்தார். கரிசல் மண்ணையும் அதன் மனிதர்களையும் அவரைப் போல விரிவாக எழுதியவர் எவருமில்லை.. …

ஆயிரம் கதைகளின் நாயகன் Read More »

கதையே வாழ்க்கை

இடக்கை நாவல் குறித்த விமர்சனம். செ.ஆதிரை.       இடக்கை நாவல் நூற்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்களையும், மன்னன்களின் அசுர வேட்டைகளையும், கொலைகளையும், அவர்களின் மன்னிப்புகளையும், மனித பசியின் கோரதாண்டவத்தையும், நீதி மறுக்கப்பட்டவர்கள், நீதி கேட்டு அலைவதையும், டெல்லி மாநகரைச் சுற்றி தெருத்தெருவாக அலைந்துதிரிந்து தெரிந்துகொண்டதுபோல் உள்ளது ….        இதில் முதல் கதையே ஒளரங்கசீப்பைப் பற்றியது தான் …..தனக்கு எதிராக போர்த் தொடுக்க வரும் மன்னர்களை பயத்தில் தள்ள, அரசனுக்கு எதிரான போரில் தோற்ற வீரர்களின் 1000 நாக்குகளை …

கதையே வாழ்க்கை Read More »

கடலில் ஒரு காதல்

நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான பால் வான் ஹெய்ஸேயின் “L’Arrabiata” சிறுகதையைக் காளி என்ற பெயரில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார். உலகின் சிறந்த காதல்களில் இதுவும் ஒன்று. கதை எழுதப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகிறது. இந்தக் கதையைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள் க.நா.சு மொழியாக்கம் செய்துள்ள உலக எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்க்கும் போது அவரது ஆழ்ந்த பரந்த வாசிப்பின் ஆர்வமும் ரசனையும் புலப்படுகிறது. இரண்டாம் தரமான, மூன்றாம் தரமான ஒரு கதையைக் கூட …

கடலில் ஒரு காதல் Read More »

தானே உலரும் கண்ணீர்

கிஷோர் குமார்  எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல் குறித்து. *** சமூகத்தின் கடைக்கோடி மனிதர்களையும், அதிகாரத்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களையும் பற்றி தமிழ் இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டு வந்துள்ளது.  இக்கருவை வரலாற்றுக் காலத்தில் வைத்து ஆராய்கிறது ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல். அத்தோடு மட்டும் இந்நாவலைக் குறுக்கிக்கொள்ள முடியாதபடி வாசிப்பால் விரித்தெடுக்க வேண்டிய பலதளங்களையும் இந்நாவல் தொட்டுச் சென்றுள்ளது. முகலாய பேரரசரான அவுரங்கசீபின் இறுதிக் காலத்தில் அனைத்து வரலாற்று நாயகர்களும், மாமன்னர்களும், புரட்சி வீரர்களும் அனுபவிக்கும் அந்த கொடுந் தனிமையை …

தானே உலரும் கண்ணீர் Read More »

வீடில்லாதவர்கள்

ரஷ்யக் கரடிக் குடித்தனம் என்ற சிறார் கதை ஒன்றைத் தினமணி இணையத்தில் படித்தேன் சின்னஞ்சிறிய நாட்டுப்புறக் கதை. கண்முன்னே காட்சிகள் தோன்றி மறைகின்றன.குயவன் தவறவிட்டுச் சென்ற பானை ஒரு வீடாக மாறுகிறது. அந்தப் பானையைக் கரடி ஆக்கிரமித்துக் கொண்டவுடன் இருப்பிடம் பறிபோகிறது. இது சிறார் கதை மட்டுமில்லை. அதிகாரத்தின் இயல்பினைப் பற்றியது ••• பானைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு ஒரு குயவர் செல்லும் போது வண்டியிலிருந்து ஒரு பானை தவறி கீழே விழுந்துவிடுகிறது. அந்தப் பானையைக் கண்ட ஈ …

வீடில்லாதவர்கள் Read More »

பிரான்சில் தமிழ் இலக்கிய விழா

பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில் Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கிறார்கள். Editions Zulma என்ற பிரெஞ்சு பதிப்பாளர் இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் அவருடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். …

பிரான்சில் தமிழ் இலக்கிய விழா Read More »