Month: August 2021

மலைக்கிராமத்தின் பள்ளி

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’ நாவலை என் இருபது வயதுகளில் படித்திருக்கிறேன். மலைக்கிராமத்துக்குச் செல்லும் ஒரு பள்ளி ஆசிரியரின் கதையை விவரிக்கக்கூடியது. ஆடு மேய்ப்பவர்கள் வாழும் அந்தச் சிற்றூரில் அவர் எப்படித் தங்கி பள்ளிக்கு மாணவர்களைச் சேர்க்கிறார் என்பதை அழகாக விவரித்திருப்பார்கள். The Miracle (2015 film) என்ற துருக்கிப்படத்தைப் பார்த்தபோது பன்கர்வாடி தான் நினைவில் வந்தது. இப்படமும் மலைக்கிராமத்தினை தேடிச் செல்லும் பள்ளி ஆசிரியரின் கதையே. மாஹிர் எக்ரெட்மேன் ஒரு பள்ளி ஆசிரியர் .1960களில் துருக்கியின் …

மலைக்கிராமத்தின் பள்ளி Read More »

ஆறும் மலையும்

இரண்டு தமிழ்ப் படங்களைச் சமீபத்தில் பார்த்தேன். இப்படங்கள் சென்ற ஆண்டில் வெளியாகியிருந்தன. அப்போது பார்க்க இயலவில்லை. சில தினங்களுக்கு முன்பாக இணையத்தில் பார்த்தேன். இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன. கமலி from நடுக்காவேரி – ராஜசேகர் துரைசாமி இயக்கியது. அவரது முதற்படம். மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மென்மையான காதல்கதையைப் பார்த்து நீண்டகாலமாகிவிட்டது. ஐஐடியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் ஒரு பெண்ணின் ஆசையினை இயல்பாக, நுட்பமாக விவரித்துள்ளார்கள். படம் பார்க்கிறோம் என்ற உணர்வேயில்லை. பிளஸ் டூ படிக்கும் பக்கத்துவீட்டுப் …

ஆறும் மலையும் Read More »

இசையே வாழ்க்கை.

பணீசுவர்நாத் ரேணு புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர். இவரது தேர்வு செய்யப்பட்ட கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ரேணு இளமையில் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இயங்கியவர். பின்பு கருத்துவேறுபாட்டால் விலகிச் சென்றவர். பீகாரில் வசித்த அவரது குடும்பம் ஆர்யசமாஜத்தை சேர்ந்தது. எளிய விவசாயியாக இருந்த அவரது தந்தை காந்திய வழியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். சம்பரானில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் இதற்கு முக்கியத் தூண்டுகோலாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடிவதற்குள்ளாகவே ரேணுவின் அரசியல் ஈடுபாடு துவங்கிவிட்டது. பனாரஸில் படித்த …

இசையே வாழ்க்கை. Read More »

சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள்

இயக்குநர் இங்க்மர் பெர்க்மென் தனது முன்னுரை ஒன்றில் ஒரு நிகழ்வினைக் குறிப்பிடுகிறார். அது வர்ஜின் ஸ்பிரிங் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம். கடுங்குளிரான மே மாதத்தில் அவர்கள் வடக்கு பிரதேசமான டலார்னாவில் இருந்தார்கள். காலை ஏழுமணி அளவில் படப்பிடிப்பிற்கான இடத்திற்கு அவரது குழுவினர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தப் பனிப்பாகையில் செல்வது கடினமாக இருந்த்து. மிக அதிகமான குளிர். ஆகவே விதவிதமான குளிராடைகளை அணிந்து கொண்டு பணியாளர்கள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்கள். வழியெங்கும் பனிப்பொழிவு அதிகமாக இருந்த்து. படப்பிடிப்பு …

சிறிய உண்மைகள் 6 பனிப் பறவைகள் Read More »

இரவு ரயிலில் இரண்டு பெண்கள்

ஒரு ரயில் பயணத்தை இத்தனை அழகாகப் படமாக்கமுடியுமா என வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் SOMETHING USEFUL பெண் இயக்குநரான .பெலின் எஸ்மர் இயக்கிய துருக்கி நாட்டுப்படம். 2017ல் வெளியானது வழக்கறிஞரும் கவிஞருமான லேலா தன்னோடு பள்ளியில் படித்த நண்பர்கள் 25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்று சேரும் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பக் காத்திருக்கிறாள். அது நீண்ட தூர ரயில் பயணம். தற்செயலாக ரயில் நிலையத்தில் பயிற்சி செவிலியராக வேலை செய்யும் கனனை சந்திக்கிறாள். அவளது தந்தை தன் …

இரவு ரயிலில் இரண்டு பெண்கள் Read More »

கவிதையின் கையசைப்பு

உலகக் கவிதைகளை அறிமுகம் செய்யும் எனது கவிதையின் கையசைப்பு நூல் பற்றி பவித்ரன் விக்னேஷ் சிறந்த அறிமுகம் ஒன்றை தந்துள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம்.

கனகராஜ் பாலசுப்ரமணியம் கன்னடத்தில் எழுதும் தமிழ் எழுத்தாளர். இவரது வாட்டர்மெலன் என்ற சிறுகதைகளின் தொகுப்பினை நல்லதம்பி மொழியாக்கம் செய்திருக்கிறார். யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் படித்த மிக முக்கியமான சிறுகதைத் தொகுப்பு. கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு …

தமிழ் வாழ்க்கையின் புதிய பரிமாணம். Read More »

போராடும் தவளை

உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம் ந.பிரியா சபாபதி.      ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான்.  மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான்.  நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது …

போராடும் தவளை Read More »

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள்

 (இந்து தமிழ்திசை நகுலன் நூற்றாண்டு சிறப்புப் பகுதியில் வெளியான கட்டுரை – 22.8.21) நகுலன் எட்டு நாவல்கள் எழுதியிருக்கிறார் அல்லது எட்டுப் பெயர்களில் ஒரே நாவலின் வேறுவேறு பகுதிகளை எழுதியிருக்கிறார் என்றும் சொல்லலாம். நவீன நாவல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான வடிவம். அது மரபான நாவலைப் போல் கதையை வளர்த்தெடுத்து உச்சநிலைக்குக் கொண்டுபோவதைவிடவும் கதைவழியாகச் சுய அனுபவங்கள், நினைவுகள், பாலியல் இச்சைகள், அதன் பின்னுள்ள உளவியல், சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள், வாழ்வின் கசப்புணர்வு, …

நகுலன் கட்டவிழ்த்த நிழல்கள் Read More »

பெர்க்மெனின் வீடு

Trespassing Bergman என்ற ஆவணப்படம். பெர்க்மேன் இறந்து ஐந்து வருடங்கள் கழித்து உலகப்புகழ் பெற்ற இயக்குநர்கள் ஃபெரோ தீவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்து பெர்க்மெனை நினைவு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது பெர்க்மென் தனிமையை விரும்பி ஃபெரோ தீவில் வசித்து வந்தார். அவரது வீடு எங்கேயிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. பார்வையாளர்களை அவர் அனுமதிப்பதில்லை. ஆகவே உலகின் கண்களில் படாமல் வாழ்ந்து வந்த பெர்க்மெனின் வீட்டினையும் அவரது நூலகம் மற்றும் பணியாற்றிய அறையைக் காண்பதற்காக …

பெர்க்மெனின் வீடு Read More »