கிரா விருது

2021ம் ஆண்டுக்கான கி.ரா விருது பெறும் அன்பு நண்பர் எழுத்தாளர் கோணங்கிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் நேற்று அவருடன் தொலைபேசியில் பேசினேன். கோணங்கியோடு பல ஆண்டுகள் ஒன்றாகச் சுற்றித்திரிந்த நாட்கள் நினைவில் வந்து போனது. கோணங்கி உற்சாகமாகப் பேசினார். அடுத்த வாரம் கோவில்பட்டிக்கு நேரில் சென்று சந்திக்க இருக்கிறேன். கிரா பெயரில் கோணங்கி கௌரவிக்கப்பட்டது மிகப் பெரிய மகிழ்ச்சி. நாளை வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா இதழில் அவரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ••