Month: December 2021

அரிசி யானை- உப்பு யானை

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான விட்டல்ராவின் நதிமூலம் சுதந்திரப் போராட்ட நாட்களின் சாட்சியமாக எழுதப்பட்டிருக்கிறது. நாமக்கல் நகரை இதை விடச் சிறப்பாக யாரும் எழுதிவிட முடியாது. ஒரு ஆவணப்படம் போல நகரின் தொன்மையான வீதிகளையும் அதன் மனிதர்களையும் நாவல் அழகாகச் சித்தரித்துள்ளது. விட்டல்ராவ் ஒரு ஓவியர் என்பதால் காட்சிகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். எத்தனை கதாபாத்திரங்கள். மறக்கமுடியாத நிகழ்வுகள். காலத்தின் நீரோட்டம் நாவலை முன்னெடுத்துப் போகிறது மதராஸிலிருந்த நீல் சிலையை அகற்ற வேண்டும் என்பதற்காக நடந்த போராட்டம் …

அரிசி யானை- உப்பு யானை Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள அம்பை மும்பையில் வசிக்கிறார். சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. •• சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பாலபுரஸ்கார் விருது கவிஞர் மு. முருகேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. முருகேஷிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது ••

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள்.

வெஸ் ஆண்டர்சன் எழுதி, இயக்கியுள்ள ஃபிரெஞ்ச் டிஸ்பாட்ச் திரைப்படம் சினிமாவின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்திப் புதியதொரு அனுபவத்தைத் தருகிறது. உண்மையில் சினிமாவின் அடுத்த கட்டம் இதுவென்பேன். ஆண்டர்சனின் திரைமொழி ஒன்றுக்குள் ஒன்றாக விரியும் சிறார் கதைப்புத்தகங்களை நினைவூட்டக்கூடியது. அவருடைய பெரும்பாலான காட்சிகள் விசித்திர கதைகளைக் கொண்ட புத்தகத்தைப் படிப்பது போன்ற உணர்ச்சியைத் தரக்கூடியது. நடிகர்களின் விசித்திரமான தோற்றம் மற்றும் வெளிப்பாடு, அடர் வண்ணங்களைப் பயன்படுத்துவது, துள்ளலான இசை, வியப்பூட்டும் அரங்க அமைப்புகள். இவை அவரது படங்களின் விசேச …

கற்பனை நாளிதழ் – விசித்திர மனிதர்கள். Read More »

ஜாக் லண்டன் நாவல்

டாக்டர் சந்திரமௌலி ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். சர்வதேச அளவில் மிகவும் கொண்டாடப்பட்ட நாவலிது. 1906ல் வெளியான இந்நாவல் திரைப்படமாக வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. டாக்டர் சந்திரமௌலி இதனைச் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் இந்நூல் சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது

டான்டூனின் கேமிரா – ஆங்கிலத்தில்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள டான்டூனின் கேமிரா நூல் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது மொழிபெயர்ப்பு பணி முடிந்துள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு இழைகள்

கணேஷ்பாபு சிங்கப்பூரில் வசிப்பவர். தீவிரமான இலக்கிய வாசகர். எழுத்தாளர். இவரது முதற்சிறுகதை தொகுப்பு வெயிலின் கூட்டாளிகள் யாவரும் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. கணேஷ்பாபுவின் சிறுகதைகள் வடிவ ரீதியாக புதிய முன்னெடுப்புகளைக் கொண்டிருக்கின்றன. கவித்துவமான மொழியில் கதை சொல்கிறார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட உலகினை, குறிப்பாக அவர்களின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அகப்போராட்டங்களை சித்தரிக்க முயலும் இக்கதைகள் மீபுனைவின் கூறுகளை இரண்டாம் இழையாக கொண்டு கதையை புதுமையாக்குகின்றன. வாழ்க்கை குறித்த ஆழமான தத்துவார்த்த கேள்விகளை எழுப்பும் இவரது கதைகள் …

இரண்டு இழைகள் Read More »

புத்தக வெளியீட்டு நிகழ்வு.

நேற்று எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை. கும்பகோணம் என பல ஊர்களிலிருந்தும் நிகழ்விற்காக வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. திருப்புகழ் ஐஏஎஸ் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வெளியிட்டுச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும். அதில் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வைகள் மிக முக்கியமானவை. அபாரமான …

புத்தக வெளியீட்டு நிகழ்வு. Read More »

உதிரமே கவிதையாகிறது.

ஏழு புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளின் நேர்காணல்கள் கொண்ட Seven voices தொகுப்பினை வாசித்தேன். ரீடா கிபர்ட் நேர்காணல் செய்திருக்கிறார். எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிக்கும் போது அவர்கள் படைப்புகளுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள விரும்பும் அபிப்ராயங்கள். இலக்கிய நுட்பங்கள். அரசியல் நிலைப்பாடுகள். உணவுப்பழக்கங்கள். வாசிப்புப் பழக்கம். இசை மற்றும் பொது ரசனை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் தொகுப்பு எழுத்தாளர்களின் விரிவான நேர்காணலைக் கொண்டது. ஐம்பது பக்கங்களுக்கும் மேலாக ஒருவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. லத்தீன் …

உதிரமே கவிதையாகிறது. Read More »

ஐந்து சூரியகாந்திப்பூக்கள்

உலகெங்கும் சூரியகாந்திப்பூக்களைக் காத்திருப்பின் அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஓவியர் வான்கோ அவற்றைப் புரிந்து கொள்ளப்படாத சந்தோஷத்தின் வடிவமாகக் காணுகிறார். அவர் வரைந்த சூரியகாந்திப்பூக்களின் ஓவியங்கள் லண்டன், டோக்கியோ, ம்யூனிச், ஆம்ஸ்டர்டாம், பிலடெல்பியா ஆகிய ஐந்து நகரங்களின் கலைக்கூடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வான்கோவின் சூரியகாந்திப்பூக்கள் பற்றி Sunflowers (2021) என ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. டேவிட் பிக்கர்ஸ்டாஃப் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக வான்கோ பற்றி இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார் இந்தப் புதிய ஆவணப்படத்தில் பிக்கர்ஸ்டாஃப் சூரியகாந்திப் பூக்கள் …

ஐந்து சூரியகாந்திப்பூக்கள் Read More »