Month: May 2022

மதகுரு- தாயின் சாபம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் எழுத்தாளர் செல்மா லாகர்லெவ், இவரது கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவலை ‘மதகுரு’ எனத் தமிழில் க.நா.சு மொழியாக்கம் செய்திருக்கிறார் கெஸ்டா பெர்லிங் ஸாகா நாவல் 1894 இல் ஸ்வீடனில் வெளியாகியிருக்கிறது. மதகுரு நாவலைப் பலமுறை வாசித்திருக்கிறேன். காவியத்தன்மை கொண்ட நாவல். மகாபாரதத்தில் வருவது போலவே சூதாடி பெண்ணைத் தோற்கும் நிகழ்ச்சி இதிலும் இடம்பெற்றிருக்கிறது. தனது மகளைச் சூதில் இழக்கிறார் சிங்களேர். அபூர்வமான இந்த நாவலை எப்படி க.நா.சு கண்டுபிடித்து …

மதகுரு- தாயின் சாபம் Read More »

அக்கடாவின் உலகம்.

மகிழ்நிலா ஒன்பதாம் வகுப்பு, கூத்தூர்,திருச்சி *** குழந்தைகள் கரடி பொம்மைகளுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் ஒரு எண்ணம் என்னைத் திகைக்க வைக்கும், ஒருவேளை உயிரற்ற பொருள்களெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றனவா; இல்லை அவை பேசுவது குழந்தைகளுக்கு மட்டுமே கேட்கக்கூடியதா? என்ற கேள்விகள் மனதில் வந்து செல்லும். அத்தகைய கேள்விகளுக்கான விடையாக அக்கடா அமைந்திருந்தது. என்னை மீண்டும் ஒரு சிறுகுழந்தை போலச் சிந்திக்க வைத்த அக்கடாவை என்னால் மறக்க முடியாது. அக்கடா தன்னுடைய பெயரைத் தீர்மானம் செய்யும் கதை மிகவும் நகைப்பூட்டலாக …

அக்கடாவின் உலகம். Read More »

world Literature Today இதழில்

எனது சிறுகதை சொந்தக்குரல் world literature today மே இதழில் வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற இலக்கிய இதழிது. சர்வதேச அளவில் படைப்புகள் வெளியாகின்றன. திலா வர்கீஸ் எனது கதையை மொழிபெயர்ப்பு செய்துள்ளார் கதையை வாசிக்க இணைய தளத்திற்கு செல்லவும்.

நடைவணிகர்

முதுகில் சுமையோடு கையில் ஊன்றுகோலுடன் தனியே நடந்து செல்லும் வணிகரின் சித்திரம் ஒன்றைப் பார்த்தேன். அவருடன் நாய் ஒன்றும் உடன் செல்கிறது. அழகான ஓவியம். இங்கிலாந்தின், கிராமப்புறங்களிலிருந்து சிறிய நகரங்களுக்குப் பொருட்களைச் சுமந்து சென்று விற்பன செய்யும் வணிகரது கோட்டுச்சித்திரம் Street Pedlar என அழைக்கப்படும் இது போன்ற வணிகர்கள் இங்கிலாந்தில் நிறைய இருந்தார்கள். இவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்திருந்தது. ஆகவே இவர்களின் பயண அனுபவம் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. சிலரது நாட்குறிப்புகள் மற்றும் …

நடைவணிகர் Read More »

நிழல் சொல்லும் நிஜம்.

பள்ளி நாட்களில் The Count of Monte Cristo நாவலின் சுருக்கத்தை ஆங்கிலத் துணைப்பாடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன். பின்பு நாவலின் இரண்டு வேறுபட்ட திரைவடிவங்களைப் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான கதை. 2002ல் வெளியான The Count of Monte Cristo படத்திலுள்ள மழைத்துளிகளுக்கு நடுவே வாள் வீசி பயிற்சி எடுக்கும் காட்சி மறக்கமுடியாதது. அலெக்சாண்டர் டூமா பிரான்சில் மட்டுமின்றி இந்தியாவிலும் விரும்பிப் படிக்கப்பட்டவர். இவரது The Three Musketeers நாவலுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தழுவல்கள் …

நிழல் சொல்லும் நிஜம். Read More »

துப்பாக்கியிலிருந்து எழும் இசை

உலகப் புகழ் பெற்ற இசைக்கலைஞர் எனியோ மோரிகோன் பற்றி Ennio என்ற  ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். எனியோ மோரிகோன் என்றதும் வெஸ்டர்ன் திரைப்படங்களின் மறக்கமுடியாத இசை நினைவில் எழுகிறது. அதிலும் குறிப்பாக விசிலோடு கூடிய The Good the Bad and the Ugly – Main Theme மற்றும் Man with Harmonica – …

துப்பாக்கியிலிருந்து எழும் இசை Read More »

இயல்விருது

இந்த ஆண்டிற்கான இயல் – வாழ்நாள் சாதனையாளர் விருது சிறந்த ஆய்வாளரும் பதிப்பாசிரியருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வழங்கப்படுகிறது.   அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் அபுனைவு பிரிவில் தனது சுயசரிதைக்காக நீதிநாயகம் சந்துரு இயல்விருது பெற்றிருக்கிறார். அவருக்கு எனது அன்பான வாழ்த்துகள். புனைவிலக்கியத்திற்கான விருது  பெற்றுள்ள ஜெயகரனுக்கும் ,கவிதைக்கான விருது  பெற்றுள்ள ஆழியாளுக்கும் அன்பான வாழ்த்துகள்.

சதுரங்கக் காய்கள் போல

வைரவன் லெ.ரா.வின் பட்டர் பி சிறுகதைத் தொகுப்பினைப் படித்தேன். பதினைந்து சிறுகதைகள் கொண்ட முதற்தொகுப்பு. யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சொந்த ஊர் திரும்புதலின் போது வெளிப்படும் நினைவுகளையும், கடந்தகால வாழ்வின் அரிய தருணங்களையும், மறக்கப்பட்ட மனிதர்களையும் சித்தரிக்கும் கதைகள். நாஞ்சில் வட்டார வாழ்க்கையைக் கிருஷ்ணன் நம்பி, நாஞ்சில் நாடன் துவங்கி சுசில்குமார் வரை பலரும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்டு தனக்கென கதைமொழியும், கதைக்களன்களும் கொண்ட சிறுகதைகளை வைரவன் எழுதியிருக்கிறார். அதுவே இவரது வருகையைக் கொண்டாடச் செய்கிறது. …

சதுரங்கக் காய்கள் போல Read More »

பரவாயில்லையின் சங்கீதம்

கவிதைக்குள் நம்மை அழைத்துச் செல்ல எப்போதும் ஒரு மௌன ரயில் காத்திருக்கிறது. அது ஒருவர் மட்டுமே செல்லக்கூடியது. மலையின் உச்சியை நோக்கி குகைப் பாதையினுள் செல்லும் பயணமது வழக்கமான ரயில் பயணத்தில் நமக்கும் புறக்காட்சிக்குமான இடைவெளி குறைவதும் விரிவதுமாக இருக்கும். கவிதையினுள் செல்லும் ரயில் மரங்களை நெருங்கியில்லை மரங்களுக்குள்ளாகவே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது. மரத்தினுள் தண்ணீர் நுழைந்து செல்வது போல ரகசியமாக, மகிழ்ச்சியாக நீங்களும் ஒன்று கலந்துவிடுகிறீர்கள். சில வேளைகளில் இந்த ரயில் பின்னோக்கியும் செல்லக்கூடியது. அப்போது …

பரவாயில்லையின் சங்கீதம் Read More »

உலகம் கொண்டாடுகிறது.

பல்வேறு நாடுகளிலும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவரது உருவப்படம் கொண்ட பணத்தை வெளியிட்டிருக்கிறார்கள். அதுவும் அவர்களின் கதையுலகின் காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்திய எழுத்தாளர்களுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் கௌரவம் தபால்தலை அல்லது சிறப்புத் தபால் உறை வெளியிடப்படுவது தான். தி.ஜானகிராமன் நினைவாகச் சிறப்புத் தபால் உறை வெளியிடப்பட்ட நிகழ்வு ஒன்றில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். 2016ல் நடந்ததாக நினைவு. கையெழுத்துப் பிரதிகள். முதற்பதிப்புகளைப் பாதுகாத்து ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. மகாகவி பாரதியின் குரல் எப்படியிருக்கும் என்று …

உலகம் கொண்டாடுகிறது. Read More »