நேற்றின் நிழல்கள்
அபராஜிதோ என்ற தலைப்பைக் கேட்டதும் சத்யஜித்ரேயின் புகழ்பெற்ற திரைப்படமே நினைவிற்கு வரும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள அபராஜிதோ (Aparajito 2022) சத்யஜித்ரேயைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கி, பதேர் பாஞ்சாலி உருவான அனுபவத்தை விவரிக்கிறது. இப்படத்தை அனிக் தத்தா இயக்கியுள்ளார். சத்யஜித்ரேயாக நடித்துள்ள ஜீது கமல் அப்படியே இளவயது ரேயின் தோற்றம் கொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும் துல்லியமாக ரேயைப் பிரதிபலிக்கிறது. அவரது தேர்ந்த நடிப்பு மற்றும் சுப்ரதிம் போலின் ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பாகும். சாந்திநிகேதனில் ஓவியம் பயின்று விளம்பர நிறுவனத்தில் …