Month: August 2022

தேடப்படும் மனிதர்

“தி லெஜண்ட் ஆஃப் மோலி ஜான்சன்” லியா பர்செல் இயக்கியபடம். 2021ல் வெளியாகியுள்ளது ஆஸ்திரேலிய சினிமாவிற்கெனத் தனித்த அழகியல் இருக்கிறது. பூர்வகுடி மக்களின் வாழ்க்கை, பண்ணைக் குடியிருப்புகள். பிரிட்டிஷ் காலனிய ஒடுக்குமுறைகள். துரத்தப்பட்ட பூர்வகுடிகளின் அவலம், உறுதியான பெண்களின் செயல்பாடு, பழங்குடியின கலாச்சாரத்தின் தனித்துவம் போன்றவற்றைப் பல்வேறு விதங்களில் ஆஸ்திரேலிய சினிமா தொடர்ந்து விவரித்து வருகிறது. The Drover’s Wife படத்தில் ஆல்பைன் பனிமலைத் தொடருக்கு மத்தியில் தனது நான்கு குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார் மோலி …

தேடப்படும் மனிதர் Read More »

அஞ்சலி

தமிழப்பெருந்தகை அய்யா நெல்லை கண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்ப உறவாக, என் மேல் பேரன்பு கொண்டவராய் விளங்கிய அய்யாவின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.

நகுலனைக் கொண்டாடுவோம்

. நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது. தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது. நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை …

நகுலனைக் கொண்டாடுவோம் Read More »

உனது மலர் கொடியிலே

நேற்றிரவு ஜூலியன் பார்ன்ஸ் நாவலைப் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மனதில் சினிமா பாடலின் வரிகள் தோன்றியது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த பாடலைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் படித்துக் கொண்டிருந்த The Sense of an Ending நாவலுக்கும் இந்த பாடலுக்கும் என்ன தொடர்பு. ஏன் நினைவில் வந்தது என்று புரியவில்லை. இது போல நினைவின் அடுக்கிலிருந்து சில பாடல்கள் மேல் எழுந்து வருவதுண்டு உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே உனது …

உனது மலர் கொடியிலே Read More »

யாருக்கானது உலகம்

 “I like to use simple words, but in a complicated way.”  Carol Ann Duffy கரோல் ஆன டஃபி சமகாலப் பிரிட்டிஷ் கவிதைகளில் மிக முக்கியமானவர் பிரபலமான ஆண்களைப் பற்றி அவரது மனைவியின் குரலால் சொல்லப்படும் கவிதைகளை எழுதியிருக்கிறார். The World’s Wife என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது. கரோல் ஆன் டஃபி ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவர். 11 வயதில் கவிதைகளை எழுதத் துவங்கினார். தனது பதினாறு வயதில் லிவர்பூல் கவிஞர்களில் ஒருவரான …

யாருக்கானது உலகம் Read More »

கவிஞன் எனும் மேகம்

சீனாவின் புகழ்பெற்ற கவிஞர் துஃபு (Du Fu) பற்றிய ஆவணப்படம். BBC இதனைத் தயாரித்துள்ளது 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துஃபு சீனக் கவிஞர்களில் மிகச்சிறந்தவராகக் கொண்டாடப்படுகிறார். இவரது சில கவிதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் முக்கியமானது. இது போலவே உதிர்ந்த இலைகளின் பாடல் கல்பனா மொழிபெயர்ப்பில் வெளியான கவிதை தொகுப்பும் மிகச்சிறப்பானது. Du …

கவிஞன் எனும் மேகம் Read More »

எல்லை நோக்கிய பயணம்

பறவைகள் வானில் தடயமில்லாமல் பறந்து செல்வது போல மனிதர்களும் சில வேளைகளில் பயணிப்பதுண்டு. அப்படியான ஒரு பயணத்தின் கதையைத் தான் Hit The Road திரைப்படம் விவரிக்கிறது. ஈரானின் புகழ்பெற்ற இயக்குநர் ஜாபர் பனாஹி அரசிற்கு எதிராகச் செயல்பட்டார் என்று வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் பனாஹ் பனாஹி டெஹ்ரானில் உள்ள திரைப்படப் பள்ளியில் பயின்றவர், குறும்படங்களை உருவாக்கி விருது பெற்றிருக்கிறார். தந்தை இயக்கிய திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இது பனாஹ் பனாஹி இயக்கியுள்ள முதல்படம். …

எல்லை நோக்கிய பயணம் Read More »

தென்காசி புத்தகத் திருவிழாவில்

தென்காசி புத்தகத் திருவிழாவில் ஆகஸ்ட் 10 புதன்கிழமை மாலை உலகெங்கும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி வளாகத்தினுள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது