சலூன் நூலகம் நடத்தும் விழா.

பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார். பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார். தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். …

சலூன் நூலகம் நடத்தும் விழா. Read More »