ராபர்ட் போல்ட்
டேவிட் லீன் பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவர் தனது படங்களின் திரைக்கதை ஆசிரியர் ராபர்ட் போல்ட் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார். ராபர்ட் போல்ட் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர். டேவிட் லீனின் முக்கியப் படங்கள் யாவும் அவர் எழுதியவை. ராபர்ட் போல்ட் எழுதித்தருவதில் மிகக் குறைவாகவே மாற்றம் செய்வேன். மற்றபடி அவரது எழுத்துப்பணியில் குறுக்கிட மாட்டேன். திரைக்கு ஏற்ப ஒரு காட்சியை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவரை விடச் சிறப்பாக எவராலும் வசனம் …