Month: December 2022

ஷேக்ஸ்பியரின் உலகம்- 1 லியரும் முட்டாளும்

ஷேக்ஸ்பியரின் கிங் லியர் நாடகம் இருபது முறைக்கும் மேலாகத் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இதில் சில தொலைக்காட்சிக்கான தயாரிப்பு. பெரும்பான்மையான ஷேக்ஸ்பியர் நாடகங்கள் திரைப்படமாகியுள்ளன. லியர் படங்களில் ரஷ்ய இயக்குநரான கிரிகோரி கோஜின்ட்சேவ் இயக்கிய 1971 ஆம் ஆண்டு வெளியான கிங் லியர் நிகரற்றது. இப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். இன்று இணையத்தில் அதன் தரமான பிரதி காணக்கிடைக்கிறது. கிங் லியராக நடித்திருப்பவர் ஜூரி ஜார்வெட். லியர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று தோன்றும்படியான. அற்புதமான நடிப்பு. மகளால் புறக்கணிக்கப்படும் போதும் சூறைக்காற்றில் …

ஷேக்ஸ்பியரின் உலகம்- 1 லியரும் முட்டாளும் Read More »

சிறந்த புத்தகங்கள் 2022

இந்த ஆண்டில் நான் படித்த புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கவிதை நிழல், அம்மா ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத் தொகுப்பு. தனது முந்தைய கவிதைகளிலிருந்து விலகி சொல்முறையிலும் வெளிப்பாட்டிலும் புதிய உச்சங்களைத் தொட்டிருக்கிறார். •• நீரின் திறவுகோல்: பிறமொழிக் கவிதைகள்க.மோகனரங்கன்மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு கவிதைகளின் தொகுப்பு இதனைப் பற்றி இணையதளத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் தமிழினி பதிப்பகம் •• அசகவதாளம்பெரு விஷ்ணுகுமார் பெரு. விஷ்ணுகுமாரின் இரண்டாவது கவிதை தொகுப்பு. இவரது கவிதைகளில் வெளிப்படும் புதிய படிமங்கள் வியப்பூட்டுகின்றன. காலச்சுவடு …

சிறந்த புத்தகங்கள் 2022 Read More »

சாகித்ய அகாதமி விருது 2022

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதிய ‘காலா பாணி’ நாவலுக்கு அறிவிக்கபட்டுள்ளது. அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலா பாணி நாவலை வாசித்திருக்கிறேன். காளையார் கோவில் போரை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவல். தமிழக வரலாற்றின் அறியப்படாத உண்மைகளை தொடர்ந்து தனது படைப்புகளின் மூலம் வெளிப்படுத்திவருபவர் ராஜேந்திரன் அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். •••

இயல் விருது 2022 – வாழ்த்துகள்

கனேடிய இலக்கியத் தோட்டம் சார்பில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது சிறந்த எழுத்தாளரான பாவண்ணன்  மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் லெ.முருகபூபதி இருவருக்கும் வழங்கப்படுகிறது. இருவரும் எனது நண்பர்கள். சிறந்த படைப்பாளிகள். தொடர் செயல்பாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தினை வளப்படுத்தியவர்கள். பாவண்ணன் சிறந்த மொழிபெர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். முருகபூபதி இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றிருக்கிறார். மிகத்தகுதியானவர்களை தேர்வு செய்து கௌரவிக்கும் இயல்விருதுக் குழுவிற்கும் நண்பர் அ. முத்துலிங்கம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள். சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பக அரங்கில் புதிய நூல்கள் யாவும் கிடைக்கும்

ஒரு நாள் மகிழ்ச்சி

The Girl from Dak Lak என்ற வியட்நாம் திரைப்படத்தைப் பார்த்தேன். 2022ல் வெளியான இப்படத்தைப் பெட்ரோ ரோமன் சி மாய் இருவரும் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். வியட்நாமின் கிராமப்புறத்தைச் சேர்ந்த சுயோங் என்ற இளம் பெண் தனது வீட்டில் சமையல் செய்வதில் படம் துவங்குகிறது. உடல்நலமற்ற தந்தைக்கு அவளே உணவு புகட்டிவிடுகிறாள். அம்மாவும் பக்கத்துவீட்டுப் பெண்களும் சுயோட் வீட்டின் பொருளாதார நெருக்கடியைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். வேலை தேடி நகருக்குப் போகலாம் என்று சுயோங் நினைக்கிறாள் தோழி …

ஒரு நாள் மகிழ்ச்சி Read More »

புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள்

நேற்று எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. நூல்களை வெளியிட்டு சிறப்பித்தார் ஆனந்தகுமார் ஐஏஎஸ். சிறப்பு விருந்தினராக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டார். ஆசான் எஸ்.ஏ.பெருமாள். எழுத்தாளர் உதயசங்கர், பொன் மாரியப்பன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள் நூல்வெளியீட்டினைத் தொடர்ந்து பால்சாக் பற்றி சிறப்புரை ஆற்றினேன் புத்தகங்களைச் சிறப்பாக அச்சிட்டு உதவிய மணிகண்டன். புத்தகத் தயாரிப்பில் உறுதுணை செய்த ஹரிபிரசாத், அன்புகரன். நிகழ்வு ஒருங்கிணைப்பில் உதவிய சண்முகம், தூத்துக்குடியிலிருந்து வந்த பொன் மாரியப்பன். …

புத்தக வெளியீட்டுவிழா. புகைப்படங்கள் Read More »

பால்சாக் பற்றிய சிறப்புரை

உலக இலக்கியத்தினை அறிமுகம் செய்யும் விதமாக நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். இதன் வழியே மகத்தான படைப்பாளிகளைப் புரிந்து கொள்ளவும் அவர்களின் படைப்புகளைக் கொண்டாடவும் முடிந்திருக்கிறது. இந்த முறை டிசம்பர் 25 ஞாயிறு மாலை பிரெஞ்சு இலக்கியத்தின் நிகரற்ற படைப்பாளி பால்சாக் பற்றி உரை நிகழ்த்த இருக்கிறேன். தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்நிகழ்வு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது பால்சாக்கின் வாழ்வு மற்றும் படைப்பிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. யதார்த்தவாத எழுத்தின் நாயகராகக் கொண்டாடப்படும் …

பால்சாக் பற்றிய சிறப்புரை Read More »

புதிய புத்தகங்கள்-3

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள் மற்றும் அரிய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நிறங்களை இசைத்தல் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

புதிய புத்தகங்கள்-2

டிசம்பர் 25 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறவுள்ளது அதில் உலக இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு வான் கேட்கிறது வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது