புத்தகக் கண்காட்சியில் -1
நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள். தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து …