நட்பின் மறுபக்கம்.
சமீபத்தில் பார்த்த சிறந்த படம். The Banshees of Inisherin. படத்தை இயக்கியிருப்பவர் Martin McDonagh அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள தீவு ஒன்றில் கதை நிகழுகிறது. இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவையும் அதன் விளைவுகளையும் பேசும் இப்படம் நட்பின் நிலைகுலைவை அழுத்தமாகச் சித்தரிக்கிறது இசைக்கலைஞரான கோல்ம் டோஹெர்டி எளிய விவசாயியான பாட்ரைக் உடன் நீண்டகாலமாக நட்புடன் பழகுகிறார். இருவரும் ஒன்றாகக் கூடிக் குடிக்கிறவர்கள். சகல விஷயங்களையும் பற்றி அரட்டை அடிக்கக் கூடியவர்கள். திடீரென ஒரு நாள் …