அதிகாரத்தின் அறைகள்
(இடக்கை ‘ நாவல் விமர்சனம்; நெய்வேலி பாரதிக்குமார் அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார். போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை …