Month: April 2023

நன்றி

எனது பிறந்தநாளுக்கு மின்னஞ்சல் மூலமும் நேரிலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனது ஆடிட்டர் சந்திரசேகர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து பிறந்தநாளைக் கொண்டாடச் செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும் எனது பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக்கிய தூத்துக்குடி மாரியப்பன். ஜெயபால், அருண்பிரசாத் உள்ளிட்ட நண்பர்களுக்கும், நிலக்கோட்டை மாணிக்கம் நகைமாளிகை ஸ்ரீதர், எழில் உணவகம் சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது தீராத நன்றிகள்.

வெர்தரின் காதல்

கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது.  எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது. கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.  ஒருவகையில் வெர்தர் நாம் …

வெர்தரின் காதல் Read More »

அழகிய மௌனம்

எனது ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பு குறித்து வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள மதிப்புரை Aindhu Varuda Mounam – S. Ramakrishnan written by Venky Aindhu Varuda Mounam (“Silence of five years) is an alluring collection of short stories ranging from the profound to the plebian. Author S. Ramakrishnan in 32 short stories takes his readers on a …

அழகிய மௌனம் Read More »

புத்தகப் பரிசு

மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார்  K. ராம்குமார். இவர்  மாவட்ட அளவில் கலைத்திறன் விழாவில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார்.  ராம்குமாருக்கு எனது அன்பும் நன்றியும். அரசுப் பள்ளிகளில் வாசிப்பை மேம்படுத்தும் இவர் போன்ற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.    

சொற்கள் மிதக்கும் சிவப்புக்கம்பளம்

ந. பிரியா சபாபதி (எஸ். ராமகிருஷ்ணனின் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” வாசிப்பு அனுபவம்) அறிவின் திறவுகோல் புத்தகம். புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம் நூலகம். அந்நூலகம்தான் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற இந்தப் புத்தகத்தின் மையம். அந்த மையத்தைச் சுற்றி நிகழ்பவையே இக்கதை. நந்து எனும் சிறுவன் வழியாக இக்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இக்காலக் குழந்தைகளின் மனநிலையின் பிம்பந்தான் இந்த நந்து. ‘குழந்தைகளின் பிடிவாதம் பெரியோர்களின் வீராப்பைப் போன்றது அல்ல’ என்பதை நூலகம் செல்வதன் …

சொற்கள் மிதக்கும் சிவப்புக்கம்பளம் Read More »

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்

1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ். புதிய …

கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ் Read More »

பௌத்த சினிமா- 2 பிறப்பிற்கு முன்

Why Has Bodhi Dharma Left for the East பௌத்த திரைப்படங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது தென் கொரியத் திரைப்படமாகும், பே யோங்-கியூன் இதனை இயக்கியுள்ளார். மூன்று புத்த பிக்குகளின் வாழ்க்கையைப் படம் விவரிக்கிறது. தலைப்பைப் பார்த்து பலரும் படம் போதி தர்மாவைப் பற்றியது என நினைக்கிறார்கள். படம் பதிலற்ற அந்தக் கேள்வியை வேறுவிதமாக எதிர்கொள்கிறது. இந்த திரைப்படம் Zen koan போன்ற ஒரு அனுபவத்தை தருகிறது