Month: April 2023

பௌத்த சினிமா -1 கர்மா

இரண்டு வேறுபட்ட பௌத்த பிக்குணிகளின் வழியே பௌத்த சமயத்தின் நம்பிக்கைகள். மறுபிறப்பு, மடாலய வாழ்க்கைமுறையை வெளிப்படுத்துகிறது இந்த நேபாளி திரைப்படம்

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி

மாக்ஸ் லிண்டர் மௌனப்படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர். பிரெஞ்சு நடிகரான இவரது பாதிப்பில் உருவானர் தான் சார்லி சாப்ளின். தனது கடிதம் ஒன்றில் சாப்ளின் லிண்டரைத் தனது குருவாகக் குறிப்பிடுகிறார். மாக்ஸ் லிண்டர் நடித்த Max Takes a Bath என்ற மௌனப்படம் 1910ல் வெளியானது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்ன அறிவுரைக்காக மாக்ஸ் ஒரு குளியல் தொட்டியை விலைக்கு வாங்குகிறார். அதைத் தனது வீட்டிற்குக் கொண்டுவருவதில் ஏற்படும் பிரச்சனைகளை மிகவும் நகைச்சுவையாகக் …

மாக்ஸ் லிண்டரின் குளியல் தொட்டி Read More »

செகாவின் துப்பாக்கி

புதிய குறுங்கதை 4.4.23 ஆன்டன் செகாவின் கதையிலிருந்த துப்பாக்கி திருடு போயிருந்தது. யார் அதைத் திருடியது எனத் தெரியவில்லை. ஆனால் அந்தத் துப்பாக்கி ஒரு வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. திருடு போன துப்பாக்கியைப் பற்றிச் செகாவிடம் எப்படித் தெரிவிப்பது என்று கதாபாத்திரங்களுக்குத் தெரியவில்லை. ஒருவேளை திருடியதும் வேறு ஒரு கதாபாத்திரமாக இருக்குமோ என்ற சந்தேகமும் இருந்தது. செகாவ் தனது கதையிலிருந்த துப்பாக்கி திருடப்பட்டதை அறிந்து கொள்ளாமல் வேறு கதைகள் எழுதுவதில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார். சில கதாபாத்திரங்கள் …

செகாவின் துப்பாக்கி Read More »

பந்தல்குடி பள்ளி

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் R.ஜெயபால் . இவர் தனது வகுப்பு மாணவிகள் மாவட்ட மற்றும மாநில அளவில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை;ப் பாராட்டும் விதமாக எனது புத்தகங்களைப் பரிசாக வழங்கியுள்ளார் . வகுப்பறைக்குள் புத்தகங்கள் செல்வது வரவேற்க வேண்டிய செயல். ஜெயாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அறியப்படாத நட்பு

2022ல் வெளியான Turn Every Page — The Adventures of Robert Caro and Robert Gottlieb என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளர் ராபர்ட் காரோ மற்றும் அவரது எடிட்டர் ராபர்ட் காட்லீப்பிற்குமான ஐம்பது ஆண்டுகால நட்பை விவரிக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் ராபர்ட் காட்லீப்பின் மகள் லிசி. இப்போது ராபர்ட் காரோவுக்கு வயது 86. காட்லீப்பிற்கு வயது 91 க்னாஃப் (Alfred A. Knopf )பதிப்பகத்தின் தலைமை பொறுப்பு வகித்த காட்லீப் …

அறியப்படாத நட்பு Read More »