இரண்டு பார்வைகள்
சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள் ••• முகமது அலியின் கையெழுத்து கோ.புண்ணியவான் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு) •• வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு …