அரிய புகைப்படம்

தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு பற்றிய புகைப்படத்தொகுப்பில்1947ல் அவர் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரங்களின் அரிய புகைப்படம். ரேடியோ நிலையத்தில் எடுக்கபட்டது போலிருக்கிறது எவ்வளவு அழகான முகங்கள். எத்தனை விதமான பார்வைகள்.  எழுதப்படாத கதைகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.