மறைந்திருக்கும் உண்மைகள்
சமகால ஐரோப்பியத் தத்துவவாதிகளில் முக்கியமானவர் ஸ்லாவாய் ஜிஜெக் (Slavoj Zizek) . லாகானிய உளவியல் பகுப்பாய்வுகள், சமகால வாழ்க்கையை வடிவமைக்கும் சித்தாந்தம், முதலாளித்துவம் மற்றும் கற்பனையின் தர்க்கங்கள் குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார் ஜிஜெக். இவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது. சினிமாவில் நாம் காணும் காட்சிகளுக்குள் என்னவெல்லாம் ஒளிந்திருக்கின்றன. எது போன்ற பிம்பங்களைச் சினிமா உருவாக்குகிறது என்பதைப் பற்றி இந்த ஆவணப்படத்தில் ஜிஜெக் விவரிக்கிறார். நகைச்சுவை நடிகர்களிடம் காணப்படும் உடல்மொழி போல அவரிடமும் அழகான உடல்மொழி வெளிப்படுகிறது. …