பனிக்கரடியின் கனவு

புதிய சிறுகதை. மே 2023. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாறிமாறி தொலைபேசி அழைப்புகள். உயரதிகாரிகளின் அவசர உத்தரவுகள், இதன் காரணமாக வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றிய தயாபரன் பதற்றமாகியிருந்தார். அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி பின் மண்டை மற்றும் புருவங்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன. வழக்கமாகச் சாப்பிடும் பிரஷர் மாத்திரையை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்துக் கொண்டார். …

பனிக்கரடியின் கனவு Read More »