Month: May 2023

இவான் துர்கனேவின் மகள்

ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கனேவ் தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் மூன்று குழந்தைகளின் தந்தையாக இருந்தார். இவர்கள் அவரது திருமணமற்ற காதல் உறவில் பிறந்தவர்கள். இதில் பெலகோயா எனப்படும் பாலினெட் அவரால் மகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டாள். மற்ற இரண்டு பிள்ளைகளையும் தனது வாரிசுகள் என்று டயரியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இவான் துர்கனேவ் அதிகம் காதலையும் சாகசங்களையும் எழுதியவர். வேட்டையில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாகக் காதலில் ஈடுபட்டவர். அவரை விட வயதில் …

இவான் துர்கனேவின் மகள் Read More »

அரிய புகைப்படம்

தெலுங்கு எழுத்தாளர் புச்சிபாபு பற்றிய புகைப்படத்தொகுப்பில்1947ல் அவர் ஏற்பாடு செய்த இந்திய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது எடுக்கபட்ட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அன்றைய புகழ்பெற்ற திரைநட்சத்திரங்களின் அரிய புகைப்படம். ரேடியோ நிலையத்தில் எடுக்கபட்டது போலிருக்கிறது எவ்வளவு அழகான முகங்கள். எத்தனை விதமான பார்வைகள்.  எழுதப்படாத கதைகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

ரஷ்ய நாவலின் உதயம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, லியோ டால்ஸ்டாய், இவான் துர்கனேவ் ஆகிய மூவரின் முக்கிய நாவல்களும் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்களை வெளியிடுவதற்குத் தேர்வு செய்ததோடு அவற்றை எடிட் செய்து வெளியிட்டு இலக்கிய அந்தஸ்து பெற்றுத் தந்தவர் ரஷ்யன் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆசிரியர் மிகைல் நிகிஃபோரோவிச் கட்கோவ்  இவரது உறுதுணையில் தான் மூன்று படைப்பாளிகளும் தங்களுக்கான இலக்கிய இடத்தை உருவாக்கிக் கொண்டார்கள். கட்கோவோடு இவர்களுக்கு இருந்த நெருக்கம் மற்றும் மோதல்கள் பற்றி SUSANNE FUSSO எழுதிய …

ரஷ்ய நாவலின் உதயம் Read More »

கரையும் உருவங்கள்

 ‘The Last Music Store’. என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். மேகா ராமசாமி இயக்கியுள்ளார் மும்பையின் புகழ்பெற்ற மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் பற்றிய இந்த ஆவணப்படம் அதன் கடந்தகாலத்தையும் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களையும் பற்றியது. ரிதம் ஹவுஸ் பற்றிய ஆவணப்படத்தைக் காணும் போது என் மனதில் லேண்ட்மார்க் புத்தகக்கடை மூடப்பட்ட கடைசிநாளில் அங்கே சென்று புத்தகங்கள் வாங்கியது தோன்றி மறைந்தது ரிதம் என்ற பெயர் கடைக்கு வைக்கப்பட்டதற்கான காரணம், அந்தக் கடைக்கு வருகை தந்த புகழ்பெற்ற …

கரையும் உருவங்கள் Read More »

இரண்டு பார்வைகள்

சமீபத்தில் வெளியான எனது சிறுகதைகள் முகமது அலியின் கையெழுத்து, இரவுக்காவலாளியின் தனிமை குறித்து வெளியான விமர்சனக்குறிப்புகள் ••• முகமது அலியின் கையெழுத்து கோ.புண்ணியவான் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் கோ.புண்ணியவான் எனது சிறுகதை குறித்து எழுதியுள்ள விமர்சனக்குறிப்பு) •• வாசிப்பின்பத்தை நல்கிய நல்ல சிறுகதை. முகம்மது அலியின் கையெழுத்து. உள்ளபடியே பிழைப்புவாதிகள் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பற்றியே கவலைப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து கழித்துவிடுவார்கள்.. கலையின் மகத்துவம் பற்றியோ ரசிகர்களை ஆர்வத்தோடு வைத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் பற்றியோ சராசரி மனிதர்களுக்கு …

இரண்டு பார்வைகள் Read More »

கவிஞனும் கவிதையும் 2 இரண்டு புகார்கள்

ஐம்பது ஆண்டுகளில் எழுதப்பட்ட ஸ்பானியக் கவிதைகள் தொகுப்பில் ஏஞ்சல் கோன்சலஸின் (Ángel González) கவிதை ஒன்றை வாசித்தேன். கரப்பான்பூச்சி பற்றிய வியப்பூட்டும் கவிதையது. என் வீட்டிலுள்ள கரப்பான் பூச்சிகள் புகார் செய்கின்றன நான் இரவில் படிப்பதால் ஏற்படும் வெளிச்சம் மறைவிடங்களை விட்டு அவர்களை வெளியேற தூண்டுவதில்லை. அறையைச் சுற்றிவரும் வாய்ப்பை இழக்கிறார்கள் என அக்கவிதை நீள்கிறது. அதில் கரப்பான்பூச்சி இந்தத் தொந்தரவு குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் உண்மையில் இந்தக் கரப்பான்பூச்சிகள் எந்தத் தேசத்தில் வாழ்கின்றன. …

கவிஞனும் கவிதையும் 2 இரண்டு புகார்கள் Read More »

கடைசி விலங்கு

புதிய குறுங்கதை மதராஸ் பயத்தால் பீடிக்கபட்டிருந்தது. ஜப்பானியர்களின் ராணுவம் தாக்குதலுக்கு நெருங்கி வருவதாகவும் நகரின் மீது குண்டுவீசப்போவதாகவும் அறிந்த கவர்னர் ஹோப் மதராஸைக் காலி செய்ய உத்தரவிட்டிருந்தார். அரசு அலுவலகங்களில் பாதி மதனப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. உயர் அலுவலகங்களில் சில ஊட்டிக்கு இடம்பெயர்ந்தன. நீதிமன்றம் கோவைக்கு மாற்றலானது. மருத்துவமனையிலிருந்த நோயாளிகளை வேலூருக்கு மாற்றினார்கள்.. இரண்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் நகரைக் காலி செய்து சொந்த ஊரை நோக்கி போயிருந்தார்கள். எல்லாக் கடைகளும் அடைக்கபட்டிருந்தன. முழுமையாக மின்சாரம் துண்டிக்கபட்டது. லண்டனை …

கடைசி விலங்கு Read More »

அகத்துணையான எழுத்து

ந. பிரியா சபாபதி நம்மை நமக்கும் நாம் அறியாத பிறரின் வாழ்க்கையையும் நமக்குக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற புத்தகம் இந்தத் ‘துணையெழுத்து’ நூல். “மறப்போம் மன்னிப்போம்” இந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் குழந்தைகள்தாம். குழந்தைகள் உலகம் மாய உலகமும் அல்ல, மந்திரம் உலகமும் அல்ல. நிதர்சமான உண்மையை உணர்ந்த உலகம் ஆகும். குழந்தைகளை ‘ஞானியர்’ என்று சொன்னால் மிகையாது. அவர்கள் பொம்மையைத் தன் உலகமாகப் பார்க்கும் பொழுது பெரியவர்களின் பார்வைக் கோணமும் குழந்தைகளின் பார்வைக் கோணமும் …

அகத்துணையான எழுத்து Read More »

இரவுக்காவலாளியின் தனிமை

புதிய சிறுகதை. அந்திமழை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது. மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேர்களுக்கு மேலாக இரவுகாவலாளிகள் இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது. அவன் ஒரு தேவாலயத்தின் இரவுக்காவலாளியாக இருந்தான். கர்த்தருக்கும் திருடனுக்கும் நடுவே தானிருப்பதாக உணர்ந்தான். புனித மரியன்னை தேவலாயம் நூற்றாண்டு பழமையானது. கோவிலின் பெரிய கோபுரம் நூற்று இருபது அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதியில் எட்டு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றில் நிறப்பதிகைக் …

இரவுக்காவலாளியின் தனிமை Read More »

தனிக்குரல்

உண்மையைச் சொல்லும் திரைப்படங்களை மட்டுமே நான் எடுக்க விரும்புகிறேன். அதுவும். ஆழமான உண்மைகளை, கசப்பான உண்மைகளைக் கூடப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது என்கிறார் உஸ்மான் செம்பேன். ஆப்பிரிக்கச் சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் உஸ்மான் செம்பேன் குறித்த ஆவணப்படம் “Sembene!” 2015ல் வெளியான இப்படத்தை Samba Gadjigo மற்றும் Jason Silverman’ இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஆப்பிரிக்கா முழுவதும் திரையிடப்பட்டிருக்கிறது செனகலில் 1980 முதல் இப்போது வரை 90% திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன. …

தனிக்குரல் Read More »