சாராவின் பொய்கள்
ஃபர்னூஷ் சமாதி இயக்கிய 180 Degree Rule 2020ல் வெளியானது. இப்படம் அஸ்கர் ஃபர்ஹாதியின் A Separation பாதிப்பில் உருவானது என்று தெரிகிறது. இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள். தெஹ்ரானில் வசிக்கும் பள்ளி ஆசிரியையான சாரா பள்ளியில் நன்மதிப்பு பெற்றவர். படத்தின் துவக்கத்திலே வகுப்பறையில் தற்கொலைக்கு முயலும் மாணவியைக் காப்பாற்றி விசாரணை மேற்கொள்கிறாள். அவள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்தப் பிரச்சனையை வேறு எவரும் அறியாதபடி மாணவியின் அம்மாவை வரவழைத்துப் பேசி சரிசெய்கிறாள். சாராவின் கணவர் ஹமேட் கண்டிப்பானவர். …