Month: August 2023

வேட்டைக்காரனின் மனைவி

ஆன்டன் செகாவின் வேட்டைக்காரன் (THE HUNTSMAN) சிறுகதை 1885ல் வெளியானது. உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பலரும் தேர்வு செய்துள்ள கதையிது. அளவில் சிறிய கதையே. ஆனால் அதில் தான் எத்தனை மடிப்புகள். நுணுக்கங்கள். ஆன்டன் செகாவை ஏன் சிறுகதையின் மாஸ்டர் என்று கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்தக் கதை ஒரு உதாரணம். கதை யெகோர் என்ற வேட்டைக்காரனைப் பற்றியது. அவன் ஒருநாள் நாட்டுப்புற சாலையில் நடந்து செல்லும்போது, தற்செயலாகத் தனது பிரிந்த மனைவி பெலகேயாவைச் சந்திக்கிறான். வேட்டைக்காரனைப் …

வேட்டைக்காரனின் மனைவி Read More »

எவரெஸ்ட் எனும் கனவு

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப் பற்றி எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறேன். அவை சாகசப்பயணமாகவே தோன்றும். ஆனால் ‘மை எவரெஸ்ட்’ முற்றிலும் மாறுபட்ட படம். கார்ல் வூட்ஸ் இயக்கியுள்ள இப்படம் உண்மை நிகழ்வை மையமாகக் கொண்டது இங்கிலாந்தைச் சேர்ந்த மாக்ஸ் ஸ்டெய்ன்டன் பர்ஃபிட் Cerebal Palsy யால் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வாழுகிறார் ஸ்டெய்ன்டன் தனது நீண்ட காலக் கனவாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதைக் கொண்டிருக்கிறார். அவரது இந்தப் பயணத்தினை எப்படித் திட்டமிடுகிறார்கள். எவரெஸ்ட் நோக்கி எப்படிப் பயணம் …

எவரெஸ்ட் எனும் கனவு Read More »

தந்தையெனும் வெளிச்சம்

சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் அழகு நிலா தனது தந்தையைக் குறித்து அப்பன் என்ற நூலை எழுதியிருக்கிறார். நூல்வனம் பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறார்கள் காஃப்காவில் துவங்கி புதுமைப்பித்தன் வரை தந்தையோடு பிணக்கும் மோதலும் கொண்ட படைப்பாளிகளே அதிகம். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாடின் கோடிமர் காஃப்காவின் தந்தையின் கோணத்தில் ஒரு கதை எழுதியிருக்கிறார். அது தந்தையின் மனதைப் பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை என்பதன் வெளிப்பாடு. தந்தையைப் பற்றி எப்போது நினைக்கும் போது ஷேக்ஸ்பியரின் லியர் அரசனே …

தந்தையெனும் வெளிச்சம் Read More »

நீள மறுக்கும் கை

இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா இயக்கிய உம்பர்தோ டி திரைப்படம் வறுமையான சூழலில் வாழும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் உலகைச் சித்தரிக்கிறது. டி சிகாவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தை விடவும் சிறந்த படமிது. உம்பர்டோ டியால் வாடகை தர இயலவில்லை. நிறையக் கடன். அவருக்குத் துணையாக இருப்பது ஒரு நாய்க்குட்டி மட்டுமே. அவர் இல்லாத நேரத்தில் அவரது அறையைக் காம தம்பதிக்கு மணி நேரத்திற்கு வாடகைக்கு விடுகிறாள் வீட்டு உரிமையாளர். உடல்நலமற்று மருத்துவமனை போய்த் …

நீள மறுக்கும் கை Read More »

கடல் பிரார்த்தனை

ஆங்கிலப் பேராசிரியரான திலா வர்கீஸ் கனடாவில் வசிக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்து வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளர். அவர் தற்போது காலித் ஹுசைனியின் கவிதைத் தொகுப்பை கடல் பிரார்த்தனை எனத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். மத்தியதரைக்கடலில் மூழ்கி இறந்த மூன்று வயது சிரிய நாட்டு அகதியான ஆலன் குர்தி என்ற சிறுவனின் வாழ்வை மையமாக கொண்டு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள் தந்தை மகனுக்கு எழுதிய கடிதமாக விரியும் இக்கவிதைகள் சமகாலப் பிரச்சனையைத் தொட்டு அகதி வாழ்வின் துயரைப் …

கடல் பிரார்த்தனை Read More »

காந்தியின் சாட்சி

மலையாள எழுத்தாளர் எம்.என் காரசேரி எழுதியுள்ள காந்தியின் சாட்சி என்ற நூலின் வெளியிட்டு விழாவில் கலந்து கொள்கிறேன். இந்த நூலைத் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் குமரி எஸ். நீலகண்டன். ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றும் நீலகண்டன் காந்தியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 15 என்ற நாவலை எழுதியுள்ளார். மதராஸ் கேரள சமாஜத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டுவிழாவில் எம்.என். காரசேரி , கே.பி. சங்கரன், கே.சி. நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த இடம் தாசபிரகாஷ் அருகிலுள்ளது. …

காந்தியின் சாட்சி Read More »

கனவில் வந்தவர்கள்

ஒரு கனவிலிருந்து தான் இங்மர் பெர்க்மென் தன்னுடைய ‘க்ரைஸ் அன்ட் விஸ்பர்ஸ்’ (Cries and Whispers: Ingmar Bergman) திரைப்படத்தை உருவாக்கினார் என்கிறார்கள். அது சாத்தியமே. ஒரு சிவப்பு அறையில் வெள்ளை ஆடை அணிந்த நான்கு பெண்கள் ஒருவரோடொருவர் கிசுகிசுத்துக்கொண்டிருக்கும் தொடர் கனவு தான் இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது கனவில் தோன்றும் நிகழ்வுகள். காட்சிகள் விழித்தெழுந்த பின்பும் மறையாமல் நமக்குள் குமிழ் விட்டபடியே இருக்கின்றன படைப்பாளிகள் அதை உருமாற்றிப் புனைவாக்கிவிடுகிறார்கள். பெர்க்மென் திரைக்கதையாக எழுதியிருக்கிறார். …

கனவில் வந்தவர்கள் Read More »

எழுத்தின் வழியான பயணம்

சுபாஷ் ஜெய்ரேத் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். இவர் ஒன்பது ஆண்டுகள் ரஷ்யாவில் புவியியல் மற்றும் ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார். 1986 இல் அவர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார். ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது நாவல் ஆஃப்டர் லவ் 2018 இல் ஸ்பெயினில் வெளியிடப்பட்டது. இவரது Spinoza’s Overcoat, Travels with Writers and Poets சிறப்பான கட்டுரைத் தொகுப்பாகும். சுபாஷ் ஜெய்ரேத் ரஷ்ய இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதால் இந்தப் …

எழுத்தின் வழியான பயணம் Read More »

செகாவின் சகோதரி

விடிகாலையின் போது எல்லா ஊர்களும் தனது பெயர்களை இழந்து விடுகின்றன. இயக்கம் தான் ஊர்களின் பெயர்களை, அடையாளத்தை உருவாக்குகிறது. பனிமூட்டம் கலையாத விடிகாலையில் யால்டா வசீகரமான கனவுவெளியைப் போலிருக்கிறது என்று ஆன்டன் செகாவ் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். ஊரும் அதன் நினைவுகளும் அதற்குக் காரணமாக மனிதர்களுமே அவரது எழுத்தின் ஆதாரங்கள். ஆன்டன் செகாவ் தன்னை ஒரு போதும் மாநகரத்தின் மனிதராகக் கருதவில்லை. மாஸ்கோவின் தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்திலே தான் வாழ்ந்திருக்கிறார். தனது வீட்டிலே இலவச மருத்துவமனையும் சிறிய …

செகாவின் சகோதரி Read More »

இரண்டு சிகரங்கள்

லியோ டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் நேரில் சந்தித்துக் கொண்டதில்லை. ஆனால் ஒருவர் மீது மற்றவர் பெருமதிப்பு கொண்டிருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய டால்ஸ்டாய் தனது இறுதிப்பயணத்தின் போது தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் நாவலைக் கையில் வைத்திருந்தார். இன்றைய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாக்டர் ஜி. கிருஷ்ண மூர்த்தி இருவர் சந்திப்பை அழகிய புகைப்படமாக்கியுள்ளார். ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டாடும் எனக்குப் பரிசாக இதனை அனுப்பி உள்ளார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.