Month: September 2023

புத்தகங்களின் எதிர்காலம்

. புத்தகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.? என்ற கேள்வி பொதுவெளியில் தொடர்ந்து எழுப்பபட்டு வருகிறது அச்சுப் புத்தகங்கள் வெளியிடுவது குறைந்துவிடும். மின் புத்தகங்களே (EBOOKS)  அதிகம் வெளியிடப்படும் என்று சொல்கிறார்கள். அப்படியில்லை. அச்சுப் புத்தகங்களுக்கான வாசகர்கள் எப்போதும் இருப்பார்கள். மின் புத்தகம் இன்னொரு வடிவம் மட்டுமே. அதனால் பதிப்புத் தொழில் விரிவடையுமே அன்றி முடிவிற்கு வந்துவிடாது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. பதிப்புத்துறையின் இன்றைய சவால்களைப் பற்றி விவாதிக்கும் படமாக ஆலிவர் அஸ்ஸாயஸ் (Olivier Assayas )இயக்கிய Non-Fiction வெளிவந்துள்ளது. …

புத்தகங்களின் எதிர்காலம் Read More »

கண்களை மூடிப் பார்க்கிறேன்.

 “The Wonderful Story of Henry Sugar.” என்ற வெஸ் ஆண்டர்சனின் 40 நிமிஷக் குறும்படம் கதைக்குள் கதை என விரியும் அழகான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் ரோல்ட் டாலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டர்சன் கதை சொல்லும் பாணியில் ஒரு விசித்திரத்தன்மை வெளிப்படுவது வழக்கம். இதில் அந்தப் பாணி புதிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. சினிமாவை பல்வேறு கலைகளின் கூட்டு வடிவம் என்பதை ஆண்டர்சன் நன்கு உணர்ந்தவர். நாடகம், மேஜிக், கதை சொல்வது, இசைநிகழ்ச்சி. …

கண்களை மூடிப் பார்க்கிறேன். Read More »

துரோகத்தின் வெளிச்சம்

ஃபிளெமிஷ் ஓவியர் பீட்டர் பால் ரூபன்ஸ் வரைந்த சாம்சன் மற்றும் டிலீலா ஓவியம் நிகரற்ற அழகுடையது. அந்த ஓவியத்தில் டிலீலாவின் மடியில் தலைவைத்து சாம்சன் துயில்கிறான். அப்போது அவன் தலைமயிரை துண்டிப்பதற்காகக் காட்டிக் கொடுக்கிறாள் டிலீலா. வாசலுக்கு வெளியே பெலிஸ்திய வீரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓவியத்தில் டிலீலாவின் இடது கை சாம்சனின் வலது தோள்பட்டையின் மேல் உள்ளது, மறுகை விலகி இருக்கிறது. தனது செயலை முழுமனதோடு அவள் செய்யவில்லை என்பதன் அடையாளம் போலவே சித்தரிக்கபட்டுள்ளது. டிலீலாவின் …

துரோகத்தின் வெளிச்சம் Read More »

நூறு சிறுகதைகள் / நூறு உரைகள்

அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் சார்பில் எனது நூறு சிறுகதைகள் குறித்துத் தமிழ்த்துறை ஆய்வாளர்கள், பேராசிரியர்கள். வாசகர்கள் இணைய வழி உரை நிகழ்த்துகிறார்கள். இதனைப் பேராசிரியர் வினோத் ஒருங்கிணைப்பு செய்கிறார். இணைய நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். ••• விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம். இணைய வழி நூற்பொழிவு 17.09.2023 அன்று முதல் 20.11.2023 வரை நடைபெற உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் நூறு சிறுகதைகள் என்ற தலைப்பில் நிகழ உள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் ஏதேனும் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து பத்து நிமிடங்கள் …

நூறு சிறுகதைகள் / நூறு உரைகள் Read More »

கேலிச்சித்திரங்களின் உலகம்.

லியா வோல்சோக் இயக்கிய Very Semi-Serious ஆவணப்படம் நியூயார்க்கர் இதழில் வெளியான கேலிசித்திரங்கள் குறித்துப் பேசுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை தாங்கள் வரைந்த புதிய கேலிச்சித்திரங்களுடன் ஓவியர்கள் நியூயார்க்கர் அலுவலகம் வருவது வழக்கம். யார் வேண்டுமானாலும் தாங்கள் வரைந்த ஓவியத்துடன் வரலாம். அந்தக் கேலிச்சித்திரங்களிலிருந்து பதினைந்தை அந்த வாரத்திற்காகத் தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யும் பணி சவாலானது. தேர்வாளரான ராபர்ட் மான்கோஃப் அனைத்துக் கேலிச்சித்திரங்களைப் பரிசீலனை செய்து பொருத்தமானவற்றைத் தேர்வு செய்கிறார். ஒரு கார்ட்டூனிற்கு ஆயிரம் டாலர் …

கேலிச்சித்திரங்களின் உலகம். Read More »

காட்சிகளின் அழகியல்

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் – குறித்த அறிமுகம் மீ. சித்ரா ராஜம். உலகச் சினிமாவை நேசிக்கும் பார்வையாளனுக்கும், உலகச் சினிமாவே தெரியாத சாமானியனுக்குமான அருமையான புத்தகம் .இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து எஸ்.ரா சொன்ன படங்களைத் தேடித் தேடி பார்க்க ஆரம்பித்ததால் இந்தப் புத்தகத்தை முடிக்கவே எனக்கு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆயினும் ஓரிரண்டு படங்களே பார்க்க முடிந்தது. அவர் குறிப்பிட்டுள்ள ஒரு படத்தைக் கூடக் கடந்து செல்ல முடியாமல் ஒரு வரியையேனும் நானும் இப்பகிர்வில் குறிப்பிட்டிருக்கிறேன். தேர்ந்த …

காட்சிகளின் அழகியல் Read More »

கரூர் சிந்தனை முற்றம்

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெற்ற சிந்தனை முற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை ,திண்டுக்கல், சேலத்திலிருந்தும் வாசகர்கள் வந்து கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது. சக்தி நர்சிங் கல்லூரி மற்றும் சிறகுகள் எப்எம் தலைவர் சிதம்பரம் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக உபசரித்தார்.  நூலகர் சிவகுமார் கரூர் மாவட்ட மைய நூலகத்தினை முன்மாதிரி நூலகமாக உருவாக்கியுள்ளார். குளிர்சாதனவசதி கொண்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறார். அவருக்கு எனது …

கரூர் சிந்தனை முற்றம் Read More »

தேவராஜின் உலகம்

நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்: மரு. நோயல் நடேசன் கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை. இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என …

தேவராஜின் உலகம் Read More »

ஓவியக் கண்காட்சியில்

ஓவியர் ரவி பேலட்டின் ஓவியக் கண்காட்சியில் இன்று மாலை கலந்து கொள்கிறேன் ரவி பேலட் மதுரையைச் சேர்ந்தவர். அவரது வண்ணத்தேர்வும் கோடுகளும் தனித்துவமானவை. மினிமலிசம் பாணியில் அவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. தற்போது டிஜிடல் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறார்.

பறவைகளின் வீடு

கே. பாஸ்கரன். பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன். படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம். கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள்.  கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார். இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத …

பறவைகளின் வீடு Read More »