Month: October 2023

ரேடியோ நாடகம்

எனது காந்தியைச் சுமப்பவர்கள் சிறுகதை ரேடியோ நாடகமாகத் தயாரிக்கபட்டு வருகிறது. விரைவில் சென்னை வானொலியில் ஒலிபரப்பு செய்ய இருக்கிறார்கள். இந்தச் சிறுகதை ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. காந்தியை மையமாகக் கொண்ட தமிழ் சிறுகதைகளை சுனில் கிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் தலைப்புக் கதையாகவும் இடம் பெற்றுள்ளது.

சந்தோஷத்தின் பெயரால்

Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER  2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார்.  தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை. இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று …

சந்தோஷத்தின் பெயரால் Read More »

கிதார் இசைக்கும் துறவி

விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை கிதார் இசைக்கும் துறவி குறித்து நிறையப் பாராட்டுகள் வந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குள் றாற்பது பேர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். கதை மிகவும் பிடித்திருப்பதாக வண்ணதாசன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். முகநூலிலும் கதை குறித்து எழுதியுள்ளார். அகரமுதல்வன் போனில் அழைத்துக் கதையைப் பாராட்டி உரையாடினார். பேராசிரியர் சரவணன் கதை குறித்து மிக விரிவான மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். இந்தக் கதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. கிதார் இசைக்கும் துறவி என்ற தலைப்பில் தான் …

கிதார் இசைக்கும் துறவி Read More »

மதுரையில் ராபர்டோ ரோசலினி

இத்தாலிய நியோ ரியலிச சினிமாவின் நாயகராகக் கொண்டாடப்படுகிறவர் ராபர்டோ ரோசலினி. ரோம் ஓபன் சிட்டி, பைசான். ஸ்ட்ரோம்போலி போன்ற படங்களை இயக்கியவர். இவர் இந்தியாவினைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். India, Matri Bhumi என்ற அந்த ஆவணப்படத்தில் தமிழகத்தின் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோவில், அழகர் கோவில் காட்சிகள். வீதியில் யானை வருவது. காந்தி கிராமத்தின் செயல்பாடுகள். காவிரி ஆறு. ஸ்ரீரங்கம் போன்றவை மிக அழகாகப் படமாக்கபட்டுள்ளன. இன்று அந்தக் காட்சிகளைக் …

மதுரையில் ராபர்டோ ரோசலினி Read More »

கே.ஜி. ஜார்ஜின் திரைப்படங்கள்.

மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜின் நினைவைப் போற்றும் விதமாகச் சிறப்பு மலர் ஒன்றை மலையாளத்தில் கொண்டு வருகிறார்கள். அந்த மலரில் கே.ஜி.ஜார்ஜின் திரைப்படங்கள் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். நண்பர் ஷாஜி இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். **

துறவியும் காதலனும்

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்கள் யாவும் இரண்டு முக்கியச் சரடுகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று துறவின் பாதை. மற்றது கலையின் பாதை. இரண்டும் சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும். துறவும் கலையும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேட்கையினையும் ஹெஸ்ஸே தொடர்ந்து முன்வைக்கிறார். தனது நாவல்களில் நட்பினை முதன்மையான உறவாகக் கொண்டாடுகிறார் ஹெஸ்ஸே. ஞானத்தை அடையும் முன்பு சித்தார்த்தா உலகியல் இன்பங்களில் திளைக்கிறான். ஆனால் கோவிந்தன் துறவின் பாதையில் சென்று இயற்கையிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டுவிடுகிறான். இரண்டு பாதைகளும் சந்தித்துக் கொள்ளும் …

துறவியும் காதலனும் Read More »

ரஷ்ய இலக்கியக் கட்டுரைகள்

ரஷ்ய இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை. புஷ்கின் துவங்கி இன்று முக்கியக் கவியாக விளங்கும் வேரா பாவ்லோவா வரை இதில் இடம்பெற்றுள்ளார்கள். இந்நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியிடப்படுகிறது.

நிமித்தம் / ஆங்கிலத்தில்

எனது நாவல் நிமித்தம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் சந்திரமௌலி இதனை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். விரைவில் இந்த நாவல் வெளியாகும்.