Month: October 2023

எஸ்.ரா கதைகள் -நூறு

எஸ் ரா கதைகள் -நூறு என எனது சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இணைய வழியாக நடைபெற்ற இந்த அறிமுக உரைகள் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ‘ இதுவரை நூறு சிறுகதைகளுக்கும் மேலாகவே அறிமுகவுரை நிகழ்த்தியுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் துவங்கி பள்ளி மாணவி வரை இதில் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டிய நிகழ்வை அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் …

எஸ்.ரா கதைகள் -நூறு Read More »

கடலோடு சண்டையிடும் மீன்

சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கடலோடு சண்டையிடும் மீன். கடலோடு சண்டையிடும் மீன், நீளநாக்கு, பம்பாழபம், லாலி பாலே என சிறுவெளியீடுகளாக வந்த நான்கு சிறார்கதைகளைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது.

சிறுபத்திரிக்கையின் குரல்

Little Magazine Voices வங்காளத்திலுள்ள சிறுபத்திரிக்கைக் கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம். வங்காளத்தில் நிலவும் சிறுபத்திரிக்கைச் சூழல் அதன் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள். புத்தகக் கடைகள் பற்றிய இந்த ஆவணப்படம் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது. குறிப்பாக சமகால வங்காள இலக்கியம் மற்றும் அறிவுசார் பண்பாட்டின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகிறது . தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சிறுபத்திரிக்கைகள் ஆற்றிய பங்கு முக்கியமானது. மிகச்சிறந்த படைப்பாளிகள் சிறுபத்திரிக்கையிலிருந்து உருவானவர்களே. சிறந்த மொழிபெயர்ப்புகள். புனைகதைகள். கவிதைகளை சிறுபத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதனை நடத்திய எழுத்தாளர்கள் நண்பர்களின் பொருளாதார …

சிறுபத்திரிக்கையின் குரல் Read More »

அரவான் புதிய பதிப்பு

தேசாந்திரி பதிப்பகம் சார்பில் எனது அரவான் நாடகத்தொகுப்பு புதிய பதிப்பாக வெளியாகிறது அரவான் நாடகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஓரியண்ட் பிளாக்ஸ்வான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாடகம் ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியில் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன.

மதுரை புத்தகத் திருவிழாவில்

மதுரை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கம் எண் – 72 வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். புகைப்படங்கள் நன்றி : Shruti Ilakkiyam

ஓடிய கால்கள்

அடிடாஸ். பூமா இரண்டும் புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனங்கள். டாஸ்லர் சகோதரர்கள் எனப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த அடோல்ஃப் மற்றும் ருடால்ஃப் சகோதரர்கள் பிரிந்து இந்த நிறுவனங்களை உருவாக்கினார்கள். இவர்கள் எப்படி விளையாட்டு வீர்ர்களுக்கான சிறப்புக் காலணி தயாரிப்பில் ஈடுபடத் துவங்கினார்கள். எவ்வாறு புகழ்பெற்றார்கள். எதன் காரணமாக இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அந்தப் பிரிவிற்குப் பின்பு எப்படித் தனக்கெனத் தனி நிறுவனத்தை உருவாக்கினார்கள் என்பதை அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். That’s The Name Of The Game! – …

ஓடிய கால்கள் Read More »

நகரங்களே சாட்சி

சிறந்த ஆசியத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நகரங்களே சாட்சி டிசம்பர் 25ல் சென்னையில் வெளியாகிறது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

இடக்கை நாவல் குறித்து

எனது இடக்கை நாவல் The Final Solitude என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. ஸீரோ டிகிரி இதனை வெளியிட்டுள்ளது. ப்ரீதம் சக்ரவர்த்தி மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவலைப் பாராட்டி OPEN MAGAZINE ல் மலையாள எழுத்தாளர் கே. ஆர் மீரா எழுதியுள்ள குறிப்பு I consider The Final Solitude originally written in Tamil by S Ramakrishnan a bold and ambitious experiment in theme and craft. It is an …

இடக்கை நாவல் குறித்து Read More »