Month: October 2023

தனித்த சொற்கள்

ஆலன் பேடன், ஜேம்ஸ் ஜாய்ஸ், யுவான் ருல்ஃபோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், கவிஞர் லி பெய், நாட்சுமே சோசெகி, போஹுமில் ஹரபால், ஹன்னா தியாப்,.ஹென்ரிக் போல், ஃபொ்னான்டோ ஸோரன்டினோ என நீளும் உலக இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தனித்த சொற்கள். தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் இந்த நூல் டிசம்பர் 25 மாலை சென்னையில் வெளியாகிறது.

மகனே உலகம்

ராஜசேகர் மண்டியிடுங்கள் தந்தையே என்ற நாவலை படித்தேன். ஒரு சிறந்த நாவலை படித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இந்நாவலை படிக்கும்பொழுது ரஷ்யாவில் வாழ்வது போல உணர்ந்தேன். லியோடால்ஸ்டாய் தவறுகளைச் செய்யும் ஒரு சாதாரண மனிதராகவும் சக மனிதனை நேசிக்கும் ஒரு புனிதராகவும் என் கண் முன்னே நிற்கிறார். சோபியா தன் கணவனுக்கும் அவன் காதலிக்கும் நடுவே பாசப் போராளியாக நிமிர்ந்து நிற்கிறாள். அக்ஸின்யா தன் மகனுக்கும் காதலனுக்கும் நடுவே உரிமையில்லாத காதலியாக மகனே உலகம் எனும் அவலத்தாயாகப் புதைந்து …

மகனே உலகம் Read More »

தோற்றம் சொல்லாத உண்மை

நான் பார்த்து ரசித்த சர்வதேசத் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு தோற்றம் சொல்லாத உண்மை. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது சென்னையில் டிசம்பர் 25 மாலை இந்நூல் வெளியிடப்படுகிறது.

கவிஞனும் கவிதையும்

கடந்த இரண்டு ஆண்டுகளில் கவிதைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கவிஞனும் கவிதையும் என்ற தலைப்பில் வெளியாகிறது டிசம்பர் 25 அன்று இந்த நூல் வெளியிடப்படுகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பில் தமிழ் மற்றும் அயல்மொழிக் கவிதைகள் குறித்து எழுதியிருக்கிறேன்.

கடைசி சாட்சியம்.

GORBACHEV. HEAVEN என்ற மிகையில் கோர்பசேவ் பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். அவரது கடைசி வருஷங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆவணப்படம் உலகிற்குத் தேவை என்று ஒரு காட்சியில் அவரே குறிப்பிடுகிறார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு கோர்பசேவ் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவரது அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிந்து போனது என்றார்கள். இந்த ஆவணப்படத்தில் அவர் குறித்த விமர்சனங்களை நேரடியாகக் கேட்கிறார்கள். மிகவும் வெளிப்படையாகக் கோர்பசேவ் பதில் சொல்கிறார். அதில் வெளிப்படும் உறுதி மற்றும் தனது …

கடைசி சாட்சியம். Read More »

மாஸ்கோவின் மணியோசை

ரஷ்ய இலக்கியங்கள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மாஸ்கோவின் மணியோசை இந்த நூல் டிசம்பர் 25 அன்று வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. ரஷ்ய இலக்கியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த அறிமுகத்தை வழங்கும். கவிஞர் அலெக்சாண்டர் புஷ்கின், கோகோல், லியோ டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, இவான் துர்கனேவ், லேர்மன்தேவ், குப்ரின், ஆன்டன் செகாவ். கொரலன்கோ,இவான் கோன்சரோவ், சிங்கிஸ் ஐத்மாதவ், ஐசக் பேபல், மாக்சிம் கார்க்கி, போரிஸ் பாஸ்டர்நாக், பாஸீ அலீயெவா ,அலெக்சாண்டர் …

மாஸ்கோவின் மணியோசை Read More »

காதலின் கண்கள்

டச்சு ஓவியர் வான் ப்ரோன்க்ஹார்ஸ்ட் (Jan Gerritsz. van Bronchorst ) கிரேக்கத் தெய்வமான ஜீயஸ் தனது காதலியைப் பசுவாக உருமாற்றிய காட்சியை ஓவியமாக வரைந்திருக்கிறார். ஜீயஸ் இடி மின்னல், மழை மற்றும் காற்றின் தேவன். , நிரந்தரக் காதலனான ஜீயஸ் அழகான பெண்கள் தனிமையில் இருப்பதைக் கண்டால் உடனே மேகவடிவில் அவர் முன்பு தோன்றி மயக்கிவிடுவார். அதிலும் கருமேக வடிவம் கொண்டு வட்டமிடுவது வழக்கம் இதனை அறிந்து வைத்திருந்த ஜீயஸின் மனைவி ஹீரா அவரைக் கண்காணிக்க …

காதலின் கண்கள் Read More »

சிறந்த பத்து

பெடரல் இணையதளம் சமீபத்தில் வெளியான சிறந்த பத்து ஆங்கில மொழியாக்க நூல்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் எனது சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு THE MAN WHO WALKED BACKWARDS AND OTHER STORIES இடம் பெற்றுள்ளது. Ten recent titles in translation that you must add to your TBR list இணைப்பு https://thefederal.com/category/features/international-translation-day-2023-10-new-books-you-must-not-miss-97166 Courtesy: the federal.com online magazine

மொழிபெயர்ப்பு விருதுகள்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் சார்பில், சிறந்த மொழி பெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவில் பணியாற்றினேன். என்னோடு பேராசிரியர் பழனி கிருஷ்ணசாமி, மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினார்கள். இந்த விருது வழங்கும் விழா நேற்று சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினேன். டேவிட் கிராஸ்மேன் எழுதிய ‘நிலத்தின் விளிம்புக்கு’ நாவலை மொழியாக்கம் செய்த அசதாவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் …

மொழிபெயர்ப்பு விருதுகள் Read More »