அன்னாவும் அரசரும்.
வரலாற்றுப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான கதைகள் ஹாலிவுட்டில் எப்போதும் வெற்றி பெற்றுள்ளன, அப்படியான ஒரு திரைப்படமே Anna and the King of Siam. 1946ல் வெளியானது சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த கலை இயக்கத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ளது. மார்க்ரெட் லாண்டன் நாவலை மையமாகக் கொண்டது. இக்கதை அமெரிக்காவில் இசைநாடகமாக நிகழ்த்தப்பட்டுப் பெரும்புகழ் பெற்றிருக்கிறது. அந்த வரவேற்பே படம் உருவாக முக்கியக் காரணம். சயாம் என்பது இன்றைய தாய்லாந்து. கதை 1862ல் நடக்கிறது. ராமா IV …