அ.கி.கோபாலன்
முனைவர் மு.வளர்மதி எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடிகள் நூலில் அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் இணையத்தில் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது •• வங்க மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்தவர்களில் முக்கியமானவர் அ.கி.ஜெயராமன் . இவர் சரத்சந்திரரின் நூல்களை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1941 ல் அ.கி. ஜெயராமன் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுக் கைதாகி சென்னையில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சரத் சந்திரரின் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது. அ.கி. ஜெயராமனின் உடன் பிறந்த …