Day: November 9, 2023

நினைவில் ஒளிரும் காதல்

Past Lives 2023ல் வெளியான கொரியத் திரைப்படம். அழகான காதற்கதை. இயக்குநர் செலின் சாங்கின் முதற்படம் என்பதை நம்ப முடியவில்லை செலின் சாங் பற்றி இணையத்தில் தேடிப் படித்தேன். செலின் சாங் கொரியாவைச் சேர்ந்தவர். கனடா மற்றும் அமெரிக்காவில் வசிக்கிறார். நாடக இயக்குநராகப் பணியாற்றியிருகிறார். ஆன்டன் செகாவின் நாடகத்தை இயக்கியிருக்கிறார். அவரது ஆதர்ச எழுத்தாளர் செகாவ். Past Lives அவரது முதற்படம். மிகுந்த கவித்துவத்துடன் கலைநேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். படத்தில் நாயகி நோரா இவரைப் போலவே நாடகத்துறையில் பணியாற்றுகிறாள். …

நினைவில் ஒளிரும் காதல் Read More »

எலியின் பாஸ்வேர்ட் – ஆங்கிலத்தில்

எலியின் பாஸ்வேர்ட் என்ற எனது சிறார் நூலை சசிகலா பாபு மற்றும் மேகலா உதயசங்கர் இணைந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது.