வாசகர்களின் அன்பு
கேரளாவின் கோட்டயத்திலிருந்து டி.எம்.சந்திரசேகரன் என்பவர் மின்னஞ்சல் செய்திருந்தார். அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது. கூகுள் உதவியால் மொழியாக்கம் செய்து படித்தேன். மலையாளத்தில் வெளியாகியுள்ள எனது உப பாண்டவம் நாவலைப் பாராட்டி எழுதியிருந்தார். உப பாண்டவம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆறு மாதங்களில் மட்டும் ஐம்பது மின்னஞ்சல்களுக்கு மேல் வந்திருக்கும். பெரும்பான்மை மலையாளத்தில். தங்களின் பாராட்டினை எழுத்தாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்ற மலையாள வாசகர்களின் பண்பை எண்ணி வியந்து போனேன் மகாபாரதம் மீது மலையாளிகளுக்கு …