பறக்கும் சுடர்கள்
நூல்வனம் பதிப்பகம் புத்தகத் தயாரிப்பில் முன்னோடியானது. மணிகண்டன் மிகவும் கலை நேர்த்தியாகப் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார். தொடர்ந்து ரஷ்ய இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளியிட்டு வருவது பாராட்டிற்குரியது அவரது சமீபத்திய வெளியீடு ரூமி கவிதைகள். தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் கவிஞர் க. மோகனரங்கன். ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன் சிறந்த கவிஞர், தேர்ந்த மொழி பெயர்ப்பாளர். ஜென் கவிதைகளாக இருந்தாலும் சமகால உலகக் கவிதைகளாக இருந்தாலும் அதனை ஆழ்ந்து புரிந்து கொள்வதுடன் அதே கவித்துவத்தைத் தமிழிலும் கொண்டு வருபவர். அவரது …