இரண்டு பயணங்கள்
நிலம் கேட்டது கடல் சொன்னது வாசிப்பனுபவம் மீ. சித்ரா ராஜம். ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது ,புல்லினும் சிறியது ஆகிய இரண்டு பெரிய கட்டுரைகளை உடையது இந்த நூல். தேசாந்திரியான எஸ்.ரா ஜப்பானியப் பயணத்தின் போது தான் கண்ட ஹிரோஷிமாவையும், ஹீரோஷிமாவின் மீது குண்டுமழை பொழிந்து நிர்மூலமாக்கிய அமெரிக்காவின் வால்டன் குளத்தோடு இயைந்த தோரோவின் இயற்கை வாழ்வியலையும் நம்மோடு பகிர்கிறார். ஜப்பானிய மக்களின் நன்றி தெரிவித்தல், பொது இடங்களில் நடக்கும் பண்பு, தேசப்பற்று, மொழிப்பற்று ஆகிய விழுமியங்களை விளக்குகிறார். …