எழுத்தாளனின் உலகம்
எழுத்தாளர்களின் நேர்காணல்களைக் கொண்ட தொகுப்பில் the Paris Review Interviews (WRITERS AT WORK) தொகுதிகளுக்கு இணையே கிடையாது. என்னிடம் 9 தொகுதிகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதன் ஒரு தொகுதியை எடுத்துப் படிப்பேன். எழுத்தாளர்களை நேர்காணல் செய்பவர்கள் எவ்வளவு ஆழ்ந்து வாசித்துள்ளார்கள். எது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள் என்பதற்கு இந்தத் தொகுதி சிறந்த உதாரணம். நேர்காணலின் போது எழுத்தாளரின் வீடு எப்படியிருந்தது. அவர் என்ன உடை உடுத்தியிருந்தார். அவரது அன்றாட உலகம் எப்படியிருக்கிறது என்பதை …