ஷேக்ஸ்பியரின் பெயரால்

இந்தியாவைக் கதைக்களனாகக் கொண்டு MERCHANT IVORY தயாரிப்பில் இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கபட்டுள்ளன. அவற்றில் மிகச்சிறந்த படமாக ஷேக்ஸ்பியர் வாலாவைக் கருதுவேன். 1965 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் ஆங்கில எழுத்தாளர் ரூத் ப்ராவர் ஜப்வாலா. சசிகபூர் மதுர் ஜாஃப்ரி முக்கியக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள் இப்படத்திற்குச் சத்யஜித்ரே இசையமைத்துள்ளார். சுப்ரதா மித்ராவின் அற்புதமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அவர்கள் …

ஷேக்ஸ்பியரின் பெயரால் Read More »