மரங்களின் கடல்
புதிய சிறுகதை நரேந்திரன் ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்களது அலுவலகத்திலிருந்து பத்துப் பேர் தேர்வு செய்யப்பட்டு ஜப்பான் சுற்றுலா அனுப்பி வைக்கபடுவார்கள். இந்த முறை அவன் தேர்வு செய்யப்பட்டிருந்தான். அயோகிகஹாரா என்ற புகழ்பெற்ற வனத்தில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணையத்தில் தேடி அந்தக் காட்டின் காணொளிகளைப் பார்த்தான். தற்கொலைக்குப் புகழ்பெற்ற காடு என்றார்கள்.. அவர்கள் நிறுவனத்தில் நேரந்தவறாமை, முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்வது. உரத்த சப்தமின்றிப் பணியாற்றுவது அடிப்படை விதிகளாகும். …