Month: March 2024

காலத்தின் மணல்

மணற்கடிகாரம் ஒன்றின் மீது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் அமர்ந்திருக்கும் ஓவியம் ஒன்றைக் கண்டேன். 1625ல் வரையப்பட்டது. புகழ்பெற்ற மொகலாய ஓவியர் பிசித்ர்(Bichitr) வரைந்தது. அவர் ஜஹாங்கீரின் அரசசபைக் கலைஞர்களில் ஒருவரான ஓவியர் அபுல் ஹசனின் சீடர். இந்த ஓவியத்தில் மன்னருடன் நான்கு பேரின் உருவம் காணப்படுகிறது. அதில் சூஃபி ஷேக் ஹுசைனுக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசளிக்கிறார் ஜஹாங்கீர். ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீரும். ஞானியும் இணையாக வரையப்பட்டிருக்கிறார்கள். மன்னரின் மெல்லிய உடை. அவர் அணிந்துள்ள முத்துமாலைகள், காதணி. கையிலுள்ள …

காலத்தின் மணல் Read More »

ஆகஸ்ட் மாதக் காதல்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் புதிய நாவல் Until August யை வாசித்தேன், அவர் மறைந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்பு வெளியாகியுள்ளது. 2002ல், மார்க்வெஸிற்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நினைவு மறத்தலுக்கு ஆளான மார்க்வெஸால் அதன்பிறகு எதையும் எழுத இயலவில்லை. அவரது கடைசி நாட்களில் குடும்ப உறுப்பினர்களையே அடையாளம் கண்டு கொள்ள முடியாதவராக இருந்தார் என்கிறார்கள். எழுத்தாளனின் ஒரே சொத்து நினைவுகள் தான். அது மறையத்துவங்கும் போது அவன் இறக்கத் துவங்குகிறான். மறதியோடு நடக்கும் போராட்டம் தான் எழுத்து. …

ஆகஸ்ட் மாதக் காதல் Read More »

முப்பது வயதுச் சிறுவன்

புதிய சிறுகதை. சேதுராமனின் அப்பா கனவில் வந்திருந்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மனிதர் இப்போது ஏன் கனவில் தோன்றினார் என்று முரளிதரனுக்கு வியப்பாக இருந்தது. கண்விழித்த பிறகும் அவரைப் பற்றிய நினைவே மேலோங்கியது. படுக்கை அருகேயிருந்த இரவு விளக்கைப் போட்டார். ஆரஞ்சு வெளிச்சம் பரவியது. சுவரில் இருந்த கடிகாரம் மணி மூன்றரை என்று காட்டியது. இப்போது இந்தியாவில் பகல்நேரம். டென்வரில் பின்னிரவு. விடிவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. முதுமையில் தான் பள்ளி பற்றிய கனவுகள் நிறைய வருகின்றன. …

முப்பது வயதுச் சிறுவன் Read More »

ஒரு நாத்திகனின் பிரார்த்தனை

பிரவீன் துளசி என்ற பெயரில் எழுதிவரும் பிரவீன் சந்திரசேகரன் முறையாகப் பிரெஞ்சு பயின்றவர். சென்னை அலியான் பிரான்சேஸ் நடத்திய மொழிபெயர்ப்புப் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறார். இவர் ஒனோரே தெ பல்சாக்கின் இரண்டு நெடுங்கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். ஒரு நாத்திகனின் பிரார்த்தனை நூலை வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பால்சாக் பற்றி விரிவான உரை நிகழ்த்தியிருக்கிறேன். இந்த நூலை பிரவீன் எனக்குச் சமர்பணம் செய்திருக்கிறார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

பேசும் கை

. ஜப்பானிய எழுத்தாளர் யசுநாரி கவபத்தாவிற்கு1968ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருது பெற்றபிறகு அவர் எதையும் எழுதவில்லை. பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. நேர்காணல்கள் எனத் தொடர்ந்து பொதுநிகழ்வுகளில் கலந்து கொண்ட போதும் இலக்கியப் படைப்புகள் எதையும் அவரால் எழுத இயலவில்லை. 1972ம் ஆண்டு கவபத்தா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். அவரது கடைசிக்கதை One Arm. இந்தச் சிறுகதையில் ஒரு பெண் தனது வலது கையைக் கழட்டி ஒரு ஆணிடம் தருகிறாள். அவனுக்கு முப்பது …

பேசும் கை Read More »

பக்கத்து இருக்கை

புதிய குறுங்கதை பத்தொன்பது ஆண்டுகளாக அவன் டயரி எழுதி வருகிறான். அவற்றை ஒரு மரப்பெட்டியில் பாதுகாத்தும் வருகிறான். அவனது டயரியில் ஒரு நாளில் என்ன நடந்தது என்பதைப் பற்றி எழுதவில்லை. மாறாக எங்கே சென்றாலும் அவனது பக்கத்து இருக்கையில் யார் அமர்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டுமே எழுதி வந்தான். பக்கத்து இருக்கையில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் பொருட்டேயில்லை. ஆனால் அவனுக்கு அது முக்கியமானது. தன்னருகில் அமர்ந்திருப்பவர் சில நிமிஷங்களோ, சில மணி நேரமோ தன்னுடன் அவரது …

பக்கத்து இருக்கை Read More »

சீனாவில் தாகூர்

சீனாவின் கடைசிப் பேரரசர் பு யி வுடன் மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிற்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். இந்தப் பேரரசர் பற்றித் தான் The Last Emperor திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி அணிந்த மன்னர் என்ற பிம்பம் என் மனதில் ஆழப்பதிந்துவிட்டது. 1924 இல் தாகூர் சீனாவிற்கு வருகை தந்தார். அப்போது எடுக்கபட்ட புகைப்படமிது. Forbidden city எனப்படும் பீஜிங் அரண்மனை வளாகத்தில் இப்புகைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. 1924 மற்றும் 1928 எனத் தாகூர் இரண்டு முறை …

சீனாவில் தாகூர் Read More »

புதிய காணொளித் தொடர்

அன்றாடம் எனக்கு வருகின்ற மின்னஞ்சலில் பாதிக்கும் மேல் கேள்விகளே. அதிலும் புத்தகங்கள். எழுத்தாளர்கள், அயல் சினிமா மற்றும் பயணம் குறித்த கேள்விகளே அதிகம். பெரும்பான்மைக் கேள்விகளுக்குப் பதில் எழுதுவேன். ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடப்படும் எனது புத்தகப் பரிந்துரை காணொளிகள் நிறையப் பேருக்கு உதவிகரமாக இருந்ததை அறிவேன். தேசாந்திரி யூடியூப் சேனல் வழியாக சென்னையும் நானும் என்ற காணொளித் தொடர் உருவாக்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த சேனலில் நூறுக்கும் மேற்பட்ட எனது …

புதிய காணொளித் தொடர் Read More »

இருமொழிப் புத்தகம்

புதிய குறுங்கதை அவன் கையிலிருந்தது இருமொழிப்புத்தகம். அவனுக்கு அந்த இரண்டு மொழிகளும் தெரியாது. ஆனாலும் அப்புத்தகத்தை அவன் ஆசையாக வைத்திருக்கிறான். அடிக்கடி புரட்டிப் பார்க்கிறான். அது ஒரு கவிதைத் தொகுதி என்பதை வடிவத்தை வைத்துத் தெரிந்து கொண்டான். ஒரு பக்கம் கவிஞனின் மூலமொழியிலும் மறுபக்கம் மொழியாக்கம் செய்யப்பட்ட மொழியிலும் அச்சிடப்பட்டிருந்தது. அவனைப் போன்றவர்களுக்கு இருபுறமும் தெரிவது  சொல்வடிவு கொண்ட கோடுகளே. கிழே கிடந்த கூழாங்கல்லை கையில் எடுத்து உருட்டும் போது கிடைக்கும் சந்தோஷம் போல மொழி அறியாத …

இருமொழிப் புத்தகம் Read More »

மதராஸ் நினைவுகள்

கரிம்புமண்ணில் மத்தாய் ஜார்ஜ் எனப்படும் டாக்டர். கே.எம். ஜார்ஜ் 1914 ஆம் ஆண்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிறந்தார். 1940 களில் மலையாளத்தில் எழுத்த்துவங்கிய இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சிறந்த ஆங்கில இலக்கிய விமர்சகர், தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜவகர்லால் நேருவால் தேர்வு செய்யப்பட்டுச் சாகித்ய அகாதமியில் பணியாற்றியவர். Masterpieces of Indian Literature என்ற இந்திய இலக்கியங்களின் மிகப்பெரிய தொகுப்பு நூலை எடிட் செய்தவர். ஜார்ஜின் சுயசரிதையான AS I SEE MYSELF நூலை சாகித்ய …

மதராஸ் நினைவுகள் Read More »