Day: April 1, 2024

கதாவிலாசம் / விமர்சனம்

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்தை உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒருவரான டெய்லர் & பிரான்சிஸ் (Routledge )பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியப் பதிப்பு. அயல்நாட்டு பதிப்பு என இருவிதமாக இந்நூல் வெளியாகியுள்ளது. அதற்கான விமர்சனம் இம்மாத thebookreviewindia இதழில் வெளியாகியுள்ளது.

முரளிதரன் கண்ட கனவு

P. பொன்மாரியப்பன் தங்களது இணையதளத்தில் முப்பது வயதுச் சிறுவன் சிறுகதை வெளியாகியுள்ளதைக் கண்டு உடனடியாகக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் கதையைப் பிரிண்ட் அவுட் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு 44 வயதாகிறது. எனக்குள் இருக்கும் முப்பது வயது சிறுவன் தான் இந்தச் சிறுகதையை வாசிக்கத் தூண்டினான் என்பேன் கதையை வாசித்து முடித்தபோது என் கனவில் சேதுராமனின் அப்பா வந்தது போலவே இருந்தது. அவரை நேரில் பார்த்தது போல உணர்ந்தேன். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நட்பு ஐந்தாம் …

முரளிதரன் கண்ட கனவு Read More »