Day: April 3, 2024

நிலத்தின் குரல்

ஒரு கனவைத் துரத்திச் செல்லும் மனிதனின் கதை தான் The Promised Land. பதினெட்டாம் நூற்றாண்டில் நடக்கிறது. Ida Jessen எழுதிய நாவலைத் தழுவி, நிகோலஜ் ஆர்செல் இயக்கியுள்ளார். லுட்விக் கஹ்லெனாகச் சிறப்பாக நடித்திருக்கிறார் மிக்கெல்சென். படத்தின் சில காட்சிகள் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நட் ஹாம்சன் எழுதிய நிலவளம் நாவலை நினைவூட்டுகிறது. லுட்விக் கஹ்லென் ராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர், டென்மார்க்கில் மக்கள் வசிக்காத ஜுட்லாந்து நிலப்பகுதியை விவசாய நிலமாக மாற்ற விரும்புகிறார் …

நிலத்தின் குரல் Read More »

ஸ்ருதி டிவி / வாழ்த்துகள்

ஸ்ருதி டிவி ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தொட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. புத்தக வெளியீடுகள். இலக்கிய உரைகள், புத்தகத் திருவிழா என இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதில் ஸ்ருதி டிவியின் பங்கு மிக முக்கியமானது. ஸ்ருதி டிவியைச் சிறப்பாக நடத்திவரும் கபிலன், சுரேஷ் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக உள்ள குடும்பத்தினரை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்